சினிமா

நெட்ஃபிளிக்ஸில் வெளியாகும் விஜய்யின் ‘பீஸ்ட்’... வெங்கட்பிரபுவின் பெரிய பட்ஜெட் படம் : சினி அப்டேட்ஸ்!

‘பீஸ்ட்’ படம் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்திற்கு விற்கப்பட்டுள்ளதாக படக்குழு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெட்ஃபிளிக்ஸில் வெளியாகும் விஜய்யின் ‘பீஸ்ட்’... வெங்கட்பிரபுவின் பெரிய பட்ஜெட் படம் : சினி அப்டேட்ஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

நெட்ஃபிளிக்ஸிற்கு விற்கப்பட்ட விஜய்யின் ‘பீஸ்ட்’ படம்!

நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படத்திற்கு ‘பீஸ்ட்’ என டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய்யின் பிறந்தநாளையொட்டி படத்தின் டைட்டில் மற்றும் இரண்டு போஸ்டர்களை படக்குழு வெளியிட்டிருந்தது.

ஜூலை முதல் வாரத்தில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை சென்னையில் துவங்கத் திட்டமிட்டுள்ளனர். விஜய் மற்றும் பூஜா ஹெக்டே இடையேயான காதல் காட்சிகள் இந்த ஷெட்யூலில் படமாக உள்ளது, இதற்காக மால் போன்ற செட் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் ‘பீஸ்ட்’ படம் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்திற்கு விற்கப்பட்டுள்ளதாக படக்குழு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தியேட்டர் ரிலீஸ் கட்டாயம் என்பதும் உறுதியாகியுள்ளது.

மாஸ்டர் படத்தைப் போலவே தியேட்டர் வெளியீட்டுக்கு பின் ஒருமாத காலம் கழித்தே படம் டிஜிட்டலில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

நெட்ஃபிளிக்ஸில் வெளியாகும் விஜய்யின் ‘பீஸ்ட்’... வெங்கட்பிரபுவின் பெரிய பட்ஜெட் படம் : சினி அப்டேட்ஸ்!

வெங்கட்பிரபு படங்களிலேயே பெரிய பட்ஜெட் படம் ‘மாநாடு’!

நடிகர் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், கருணாகரன், பிரேம்ஜி உள்ளிட்டவர்களின் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் படம் வ் ‘மாநாடு’.

சமீபத்தில் இப்படத்தின் முதல் சிங்கிள் வெளியாகிருந்தது. யுவனின் இசையில் உருவாகிருந்த இந்த பாடலுக்கு ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது, யூட்யூப்பில் ட்ரெண்டிங்கில் இருந்து வரும் இந்த பாடலை தொடர்ந்து படம் குறித்து சில நிகழ்வுகளை இயக்குனர் வெங்கட் பிரபு ரசிகர்களிடம் இணையம் வழியாக பகிர்ந்துள்ளார்.

அதில் தனது சினிமா கேரியரிலே இதுதான் பெரிய பட்ஜெட் படம் என்றும் அஜித்தின் ‘மங்காத்தா’ படத்தை விடவும் இந்த மாநாடு பெரிய வெற்றியைப் பெறும் என்றும் கூறிருந்தார்.

இதைக் கேட்ட சிம்பு ரசிகர்கள் உற்சாகத்தில் மிதக்கின்றனர். சிம்புவின் பெரிய ஹிட்டுக்காக நீண்ட காலங்களாக காத்திருக்கும் அவரின் ரசிகர்களுக்கு வெங்கட் பிரபுவின் இந்த பேச்சு கூடுதல் நம்பிக்கையை அளித்துள்ளது.

banner

Related Stories

Related Stories