சினிமா

இசையமைப்பாளரையே குறிப்பிடாமல் ட்ரெய்லர் வெளியிட்ட யுவன்; சண்டைக்குச் சென்ற ப்ரேம்ஜி - வைரல் ட்வீட்!

ராதாமோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள மலேசியா டு அம்னீஷியா படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டார் யுவன் சங்கர் ராஜா.

இசையமைப்பாளரையே குறிப்பிடாமல் ட்ரெய்லர் வெளியிட்ட யுவன்; சண்டைக்குச் சென்ற ப்ரேம்ஜி - வைரல் ட்வீட்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஜோதிகாவுடைய காற்றின் மொழி படத்தைத் தொடர்ந்து டைரக்டர் ராதா மோகன் எஸ்.ஜே.சூர்யா, ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் 'பொம்மை' என்கிற படத்த இயக்கிருந்தார். அந்த படத்தோட வேலைங்கள் முடிந்து இப்போது ரிலீஸுக்கு ரெடியாக இருக்கிறது.

இதற்கிடையில், வைபவ், வாணி போஜன், எம்.எஸ்.பாஸ்கர், கருணாகரன் ஆகியோர் நடிப்பில் ஒரு படம் இயக்க கமிட்டானார், ‘மலேஷியா டு அம்னீஷியா’ என இந்தப் படத்திற்கு தலைப்பு அறிவிக்கப்பட்டது. நேற்று மாலை இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது.

ராதாமோகனின் பொம்மை படத்திற்கு இசை யுவன் ஷங்கர் ராஜா என்பதால், அந்த நட்பின் காரணமாக இந்த ட்ரெய்லரை யுவன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அந்த ட்வீட்டில் படக்குழுவினரை எல்லாம் குறிப்பிட்டிருந்தார். உடனே அந்த ட்வீட்டை ரீட்வீட் செய்தார் ப்ரேம் ஜி. அதில் "தலைவா ட்ரைலரின் வந்தது என்னுடைய இசை. ஆனா, நீங்க என்ன டேக் பண்ணவே இல்ல" என பதிவிட்டிருந்தார்.

உடனடியாக யுவன் "ஐயோ, எனக்கு தெரியாம போச்சே, அதான் மிஸ் பண்ணிட்டேன்" என பதிலளித்திருந்தார். இந்த இருவரின் ட்வீட் விளையாட்டு ட்விட்டரில் பல ரசிகர்களின் கவனத்தையும் கவர்ந்தது. முழு நீள காமெடி படமாக உருவாகியிருக்கும் இந்த படத்தை நேரடியாக ஓடிடில ரிலீஸ் பண்ண முடிவு செய்துவிட்டனர் தயாரிப்பு நிறுவனமான மங்கி மேன் கம்பெனி. அதன்படி படம் வர 28ஆம் தேதி ஜீ5 தளத்தில் வெளியாக இருக்கிறது.

banner

Related Stories

Related Stories