சினிமா

பேன் இந்திய நடிகையான சமந்தா: வெளியானது ஃபேமிலி மேன் 2 ட்ரெய்லர்; ரிலீஸ் தேதி அறிவிப்பு!

2019ல் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற ஃபேமிலி மேன் சீரிஸின் இரண்டாவது சீசன் வெளியீட்டு தேதி அறிவிப்பு.

பேன் இந்திய நடிகையான சமந்தா: வெளியானது ஃபேமிலி மேன் 2 ட்ரெய்லர்; ரிலீஸ் தேதி அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

Raj & D.K. இயக்கத்தில் உருவான வெப் சீரிஸ்தான் ஃபேமிலிமேன். மனோஜ் பாஜ்பாய், ப்ரியாமணி, ஷரிப் ஹாஸ்மி, நீரஜ் மாதவ் எனப் பல பேர் இதில் நடித்திருக்கிறார்கள். இதனுடைய முதல் சீசன் அமேஸான் ப்ரைமில் 2019ல் வெளியானது.

இந்த சீரிஸ்க்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்து பெரிய ரீச் கிடைத்தது. இந்தியில் உருவான இந்த சீரிஸ், தமிழ் உட்பட பல மொழிகளில் டப் செய்யப்பட்டும் ரிலீஸ் செய்யப்பட்டது. முதல் சீசனில் பத்து எப்பிசோட்களுடன் முடிந்தது.

சீரிஸை முடித்த விதமும் அடுத்து என்ன நடக்கும் என்ற ஆவலையும் உருவாக்கியது. இப்போது இதனுடைய அடுத்த சீசன் எப்போது வரும் என்று ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். இந்த இரண்டாவது சீசனில் சமந்தாவும் நடித்திருக்கிறார். இந்த சீசனின் நெகட்டிவ் கதாபாத்திரமும் அவர்தான் என சொல்லப்படுகிறது.

இந்த இரண்டாவது சீசனின் வேலைகள் எல்லாம் முடிந்து ரிலீஸுக்கு ரெடியாக இருந்தது. இப்போது ஃபேமிலிமேன் 2வது சீசனுடைய டிரெய்லர் இன்று காலை வெளியிடப்பட்டது.

முதல் சீசனைப் போலவே இந்த சீசனும் இந்தி மட்டுமில்லாம மற்ற மொழிகள்ல டப் செய்யப்பட்டு ரிலீஸ் பண்ண இருக்கின்றனர். அந்த டப்பிங் வேலைகளும் முடிந்துவிட்டது. ஜூன் 4ம் தேதி ஃபேமிலிமேன் 2 அமேஸான் ப்ரைமில் வெளியாக இருக்கிறது.

banner

Related Stories

Related Stories