சினிமா

`ஜாதி ரத்னாலு' படத்தால் மன அழுத்தத்தில் இருந்து மீண்ட பெண் : ரசிகைக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நாயகன்!

ஜாதி ரத்னாலு படம் பார்த்து மன அழுத்தத்தில் இருந்து மீண்ட பெண்ணிடம் நடிகர் நவீன் போலிஷெட்டி தொலைபேசியில் பேசியது ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது.

`ஜாதி ரத்னாலு' படத்தால் மன அழுத்தத்தில் இருந்து மீண்ட பெண் : ரசிகைக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நாயகன்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கடந்த மார்ச் மாதம் வெளியான தெலுங்கு படம் `ஜாதி ரத்னாலு'. இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் நவீன் போலிஷெட்டி ஹீரோவாக நடித்திருந்தார். சமீபத்தில் நவீனை ட்விட்டரில் குறிப்பிட்டு ஒரு ரசிகர் ஒருவர், "என்னுடைய தந்தை சமீபத்தில் கோவிட் காரணமாக இறந்துவிட்டார்.

அதிலிருந்து என்னுடைய அம்மா மிகுந்த மனஅழுத்தத்திற்கு ஆளானார். யாராலும் அவரைத் தேற்ற முடியவே இல்லை. அந்த துக்கத்திலிருந்து அவரை கொஞ்சமாவது மீட்டது, உங்களின் `ஜாதி ரத்னாலு' படம் தான். என் அம்மாவை மறுபடி சிரிக்க வைத்து, மகிழ வைத்ததற்கு நன்றி" என பதிவு செய்திருந்தார்.

அதற்கு பதிலளிக்கும் விதமாக, "உங்களின் இழப்புக்கு என்னுடைய வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். நேசத்துக்குரியவரை இழப்பதன் வலி என்ன என்று எனக்குத் தெரியும். ஜாதி ரத்னாலு திரைப்படம், உங்களின் அம்மாவை மகிழ வைத்ததை அறிந்து மகிழ்கிறேன். உங்களுடைய விவரங்களை எனக்கு அனுப்புங்கள், அம்மாவுக்கு ஒரு சர்ப்ரைஸ் தருகிறேன்" என ரீட்வீட் செய்திருந்தார் நவீன்.

சில நிமிடங்களிலேயே, அவரது அம்மாவிடம் வீடியோ காலில் பேசியிருக்கிறார் நவீன். மிகவும் நெகிழ்ச்சியான மகிழ்ச்சியான அந்த வீடியோ உரையாடல் இப்போது இணையத்தில் அதிகம் பரவி வருகிறது. கூடவே நவீனின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories