சினிமா

ஏப்ரல் 30ம் தேதி OTT-யில் ரிலீஸாகிறதா கார்த்தியின் 'சுல்தான்'? - அறிவிப்பு எப்போது?

தமிழில் `சுல்தான்' படம் ஏப்ரல் 30ம் தேதி ஹாட்ஸ்டாரில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

ஏப்ரல் 30ம் தேதி OTT-யில் ரிலீஸாகிறதா கார்த்தியின் 'சுல்தான்'? - அறிவிப்பு எப்போது?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கார்த்தி நடிப்பில் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகி வெளியான படம் `சுல்தான்'. ஏப்ரல் 2ஆம் தேதி வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்தப் படத்தில் நெப்போலியன், லால், ராஷ்மிகா மந்தனா, யோகி பாபு உட்பட பலரும் நடித்திருந்தனர். தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு `சுல்தான்' என்ற பெயரிலேயே வெளியானது படம்.

படம் வெளியான முதல் ஐந்து நாட்கள்ல மட்டும் தமிழ்நாடில் 19 கோடி வசூல் செய்ததாக சொல்லப்படுகிறது. கேரளாவில் 1.50 கோடியும், தெலுங்கில் 5 கோடியும் வசூல் செய்திருக்கிறது. கொரோனா சூழலில் இந்த வசூலே பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. இப்படி திரையரங்கில் ஓடிக் கொண்டிருந்த `சுல்தான்' படம் விரைவில் ஓடிடிக்கு வர இருக்கிறதாம்.

படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு இந்தப் படத்தின் ஓடிடி ரிலீஸ் வேலைகளில் இருக்கிறாராம். தமிழில் `சுல்தான்' படம் ஏப்ரல் 30ம் தேதி ஹாட்ஸ்டாரில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. அதுபோல, தெலுங்கு வெர்ஷன் `சுல்தான்' Aha ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறதாம்.

banner

Related Stories

Related Stories