சினிமா

‘விக்ரம்’ படத்தில் நடிப்பது உறுதியா? - விஜய் சேதுபதி அளித்த பதில் என்ன?

'விக்ரம்’ படத்தில் இன்னொரு பெரிய ஹீரோவான, விஜய் சேதுபதியும் நடிக்க இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

‘விக்ரம்’ படத்தில் நடிப்பது உறுதியா? - விஜய் சேதுபதி அளித்த பதில் என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

மாஸ்டர் படம் மூலமாக தமிழ் சினிமாவின் உச்ச இயக்குநராகவே மாறிவிட்டார் லோகேஷ் கனகராஜ். விஜய்க்குப் பிறகு கமல்ஹாசனை இயக்க தயாராகி வருகிறார் லோகேஷ். இந்தப் படத்திற்கு விக்ரம் என பெயர் அறிவிக்கப்பட்டு, அதற்கான டீசரையும் வெளியிட்டனர். இது கமல்ஹாசனின் 232வது படமாக உருவாகிறது. இந்தப் படத்தில் வில்லனாக நடிப்பது யார் என சிலரது பெயர்கள் வெளியானது. சில நாட்களுக்கு முன் ஃபகத் பாசில் அளித்த பேட்டியில், `விக்ரம்' படத்தில் நடிப்பதை உறுதி செய்தார்.

தற்போது கூடுதல் தகவல் என்னவென்றால், இந்தப் படத்தில் இன்னொரு பெரிய ஹீரோவான, விஜய் சேதுபதியும் நடிக்க இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஃபகத் பாசில் பெயர் வருவதற்கு முன்பே விஜய் சேதுபதியின் பெயர் அடிபட்டது. இதுபற்றி, பாலிவுட் செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், “விக்ரமில் நடிக்க என்ன அணுகியது உண்மைதான். ஆனால், இன்னும் எதுவும் உறுதியாகவில்லை. நடிக்க தேதிகள் இருக்கிறதா எனப் பார்த்துவிட்டே எதையும் உறுதியாகச் சொல்ல முடியும்” எனக் கூறியிருக்கிறார்.

ரஜினியின் `பேட்ட', விஜய்யின் `மாஸ்டர்' என இரண்டு படங்களிலும் வில்லத்தனம் காட்டிய விஜய் சேதுபதி, சமீபத்தில் தெலுங்கில் `உப்பென்னா' படத்திலும் வில்லனாக நடித்திருந்தார். தொடர்ச்சியாக ஹீரோவாக நடிப்பது மட்டுமில்லாமல், வில்லனாகவும் நடித்து, அதில் பெரிய வரவேற்பைப் பெற்றும் வருகிறார்.

banner

Related Stories

Related Stories