சினிமா

“9 இயக்குநர்கள்; 9 படங்கள்; 9 உணர்வுகள்” - மணிரத்னம் தயாரிப்பில் Netflix-ல் உருவாகும் #Navarasa

கோபம், கருணை, தைரியம், வெறுப்பு, பயம், சிரிப்பு, காதல், அமைதி, வியப்பு ஆகிய ஒன்பது ரசங்களை அடிப்படையாகக் கொண்டவை இந்தப் படங்கள்.

“9 இயக்குநர்கள்; 9 படங்கள்; 9 உணர்வுகள்” - மணிரத்னம் தயாரிப்பில் Netflix-ல் உருவாகும் #Navarasa
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

கோவிட்-19 நெருக்கடியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள திரைத்துறையில் உள்ளவர்களுக்கு ஆதரவாக நிதி திரட்டும் ஒரு முயற்சியாக மணிரத்னம், ஜெயேந்திர பஞ்சாபகேசன் ஆகிய இருவரின் ஒருங்கிணைந்த தயாரிப்பில் உருவாகும் நவரசா தமிழ்த் தொகுப்பை நெட்ஃப்ளிக்ஸ் அறிவித்துள்ளது.

நெட்ஃப்ளிக்ஸ் தனது அடுத்த தமிழ்த் தொகுப்பான நவரசாவை இன்று அறிவித்தது. இது மணிரத்னம், ஜெயேந்திர பஞ்சாபகேசன் இருவரும் தயாரித்துள்ள ஒன்பது திரைப்படங்களின் தொகுப்பாகும். கோபம், கருணை, தைரியம், வெறுப்பு, பயம், சிரிப்பு, காதல், அமைதி, வியப்பு ஆகிய ஒன்பது ரசங்களை (உணர்ச்சிகளை) அடிப்படையாகக் கொண்டவை இந்தப் படங்கள்.

“9 இயக்குநர்கள்; 9 படங்கள்; 9 உணர்வுகள்” - மணிரத்னம் தயாரிப்பில் Netflix-ல் உருவாகும் #Navarasa

தமிழ் திரையுலகின் மிகச்சிறந்த திறமையாளர்களை ‘நவரசா’ ஒன்றிணைக்கிறது. இந்தத் தொகுப்பில், அரவிந்த் சுவாமி, பிஜோய் நம்பியார், கௌதம் வாசுதேவ் மேனன், கார்த்திக் சுப்பராஜ், கார்த்திக் நரேன், கே.வி.ஆனந்த், பொன்ராம், ரதிந்திரன் பிரசாத், ஹலிதா ஷமீம் என 9 இயக்குநர்கள் ஒவ்வொரு உணர்ச்சியிலும் தங்களின் தனித்துவமான பார்வையைக் கொண்டு வருவதில் திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்த ஒன்பது குறும்படங்களில் 40க்கும் மேற்பட்ட நடிகர்களும், பல நூறு படைப்பு வல்லுநர்களும், திரைப்படத் தொழில்நுட்ப வல்லுநர்களும் பங்கு கொண்டுள்ளனர். போற்றத்தகுந்த படைப்பாற்றல் மிக்க தமிழ் சினிமா சமூகம், தனது ஒற்றுமை, மீட்சி ஆகியவை பற்றிய வலுவான செய்தியை வெளிப்படுத்துவதற்காக இதில் ஒன்றுபட்டு நிற்கிறது.

இந்தத் திரைப்படங்களின் மூலம் கிடைக்கக்கூடிய வருமானத்தை, பெருந்தொற்று நோய்ப் பரவலினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கும் தமிழ் சினிமா தொழிலாளர்களின் நல்வாழ்வுக்காக அவர்கள் பங்களிக்க உள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“9 இயக்குநர்கள்; 9 படங்கள்; 9 உணர்வுகள்” - மணிரத்னம் தயாரிப்பில் Netflix-ல் உருவாகும் #Navarasa

இந்த முயற்சி குறித்து மணிரத்னம் மற்றும் ஜெயேந்திர பஞ்சபாகேசன் கூறியதாவது :

“அவசியமான காரணங்களுக்காகப் பணம் திரட்டுவதற்கு, தனித்துவமான யோசனைகளை வெளிக்கொண்டு வருவதற்காக, குழுவாக ஒன்றுபட்டுச் சிந்திக்கும் யோசனையை நாங்கள் எப்போதும் விரும்புகிறோம். எங்களின் துறைசார்ந்த நலனுக்காகவும், பல மாதங்களாக வேலை இல்லாத எங்களது தொழிலாளர்களின் வேதனையைத் தணிப்பதற்காகவும் இந்த நேரத்தில் நாங்கள் தீவிரமாகச் சிந்தித்தோம். குறும்படங்களைத் தயாரித்து, அவற்றின் மூலம் நிதி திரட்டுவது என்ற எண்ணம் உதித்தது.

நாங்கள் அணுகிய அனைத்து முன்னணி இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களிடமும் இந்த யோசனை உடனடியாக எதிரொலித்தது, எங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இதைப் பற்றி நாங்கள் விவாதித்தபோது, நவரச தொகுப்பு யோசனை ஒரு தீப்பொறியாக உருவாயிற்று. ஒன்பது உணர்ச்சிகளை உணர்ச்சிகரமான ஒன்பது படங்களாக மாற்றுவதற்கும், பார்வையாளர்கள், நல்நோக்கம், திரைப்படத்தொழில், பொதுமக்கள் ஆகியோரை ஒன்றுபடுத்தி எண்ணுவதற்குத்தாக இந்தத் தொழில்துறையினர் ஒன்று சேர்ந்துள்ளனர். படைப்பாற்றல், நல்நோக்கம், வெகுமக்கள் ஆகியவற்றின் இந்த சங்கமத்தை உலகிற்கு எடுத்துச் செல்ல நெட்ஃப்ளிக்ஸ் முன்வந்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.” என்று கூறியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories