சினிமா

நடிகர் சிம்புவின் அடுத்த படம் ‘ஈஸ்வரன்’ - ரிலீஸானது First look போஸ்டர்! #Simbu46

சிம்புவின் 46-வது திரைப்படமான ’ஈஸ்வரன்’ சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வருகிறது.

நடிகர் சிம்புவின் அடுத்த படம் ‘ஈஸ்வரன்’ - ரிலீஸானது First look போஸ்டர்! #Simbu46
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

நடிகர் சிம்புவின் 46-வது திரைப்படத்தை சுசீந்திரன் இயக்குகிறார். இப்படம் பல திரைப்படங்களுக்குப் பிறகுக் கிராமத்துப் பின்னணியில் சென்ட்டிமென்ட், எமோஷன், காதல், ஆக்‌ஷன், நகைச்சுவை என அனைத்தும் கலந்த படமாக உருவாகவுள்ளது.

இந்தப் படத்துக்காகத் தனது உடல் எடையைக் குறைத்திருக்கிறார் சிம்பு. சமீபத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்த போது எடுத்த சிம்புவின் புகைப்படத்தின் மூலம் அவர் உடல் எடையைக் குறைத்தது ரசிகர்களுக்கு தெரியவந்தது. மேலும் அந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது.

இந்தப்படத்தில் நடிகர் சிம்புடன் பாரதிராஜா, நிதி அகர்வால் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் இந்தப் படத்தைப் படமாக்கி வரும் படக்குழு ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடிக்கவும் திட்டமிட்டுள்ளது.

மேலும் இது நாள் வரை படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட சிம்புவின் புகைப்படம் கூட வெளியில் கசியாமல் பார்த்துக் கொண்ட படக்குழு தற்போது மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளது. அதில் நடிகர் சிம்பு தோளில் பாம்புடன் தோன்றியுள்ளார். பல நாட்கள் கழித்து சிம்புவின் ரசிகர்கள் ட்விட்டரில் ‘ஈஸ்வரன்’ என்ற ஹேஷ்டேக்கை இந்திய அளவில் ட்ரெண்டாக்கி கொண்டாடி வருகின்றனர்.

மேலும், இந்தப் படம் தமிழ் மொழி தவிர்த்து தெலுங்கு, மலையாளம்,கன்னட மற்றும் இந்தியிலும் வெளியாக உள்ளதால் அந்தந்த மொழிகளில் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு.

இந்தப் படம் 2021-ம் ஆண்டின் பொங்கலுக்கு திரைக்கு வரும் என்ற அறிவிப்பையும் படக்குழு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories