சினிமா

காதலிக்க மறுத்த நடிகையை கத்தியால் குத்திய தயாரிப்பாளர் - மும்பையில் பயங்கரம்!

கத்தியால் குத்திவிட்டு காரில் தப்பி ஓடிய தயாரிப்பாளரை போலிஸார் தேடி வருகின்றனர்.

காதலிக்க மறுத்த நடிகையை கத்தியால் குத்திய தயாரிப்பாளர் - மும்பையில் பயங்கரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தெலுங்கு திரைத்துறையில் ‘குமாரி 18 ப்ளஸ்' என்னும் படத்தின் மூலம் அறிமுகமானவர் மால்வி மல்ஹோத்ரா. இவர் இந்தியில் உடான் என்ற தொடர் மூலம் அறிமுகமானவர். மேலும் இந்தியில் 'ஹோட்டல் மிலன்' என்றொரு படத்தில் நடித்துள்ளார். தற்போது தெலுங்கில் சில படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சினிமா தயாரிப்பு தொடர்பாக சினிமா தயாரிப்பாளர் குமார் மஹிபால் சிங் என்கிற தயாரிப்பாளர், சமூக ஊடகத்தில் மால்வியுடன் நட்பாகியுள்ளார்.

பின் சில முறை அவரைக் காதலிப்பதாகவும், திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றும் கோரியுள்ளார். ஆனால் மஹிபாலின் கோரிக்கையை மால்வி மறுத்துள்ளார்.

காதலிக்க மறுத்த நடிகையை கத்தியால் குத்திய தயாரிப்பாளர் - மும்பையில் பயங்கரம்!

இதனால் ஆத்திரமடைந்த தயாரிப்பாளர் மஹிபால், நேற்று இரவு 10 மணி அளவில் மும்பை வெர்ஸோவா பகுதியில் ஒரு காஃபி ஷாப்புக்கு சென்று வீடு திரும்பிக்கொண்டிருந்த நடிகை மால்வியை வழிமறித்துள்ளார். பின்னர் தன்னைத் திருமணம் செய்துகொள்ளச் சொல்லி நேரிலும் வற்புறுத்தியதற்கு, மால்வி மறுத்துள்ளார். எனவே கோபமடைந்த மஹிபால் நடிகை மால்வியை கத்தியால் மூன்று முறை பலமாகக் குத்திவிட்டு காரில் தப்பித்துவிட்டார்.

இதில் காயமடைந்த அவர் மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது மால்வியின் உடல்நிலை சீராக இருப்பதாக சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து வெர்ஸோவா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய தயாரிப்பாளரை போலிஸார் தேடி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories