சினிமா

முகக்கவசம் அணியாமல் காரில் பயணம் செய்த நடிகைக்கு அபராதம்! அதிகாரிகளுடன் காரசார வாக்குவாதம்..!

நடிகை சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈட்டுப்பட்டுள்ளார்...

முகக்கவசம் அணியாமல் காரில் பயணம் செய்த நடிகைக்கு அபராதம்! அதிகாரிகளுடன் காரசார வாக்குவாதம்..!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு மக்கள் பழைய இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளனர், இருந்தாலும் தொற்று எண்ணிக்கை இன்று வரை அதிகரித்துக் கொண்டுதான் உள்ளது எனவே கொரோனா விதிமுறைகளில் முகக்கவசம் கட்டாயமாகியுள்ளது எனவே விதிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக, அனைத்து சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டு இருந்தன. தற்போது தளர்வுகளுடன் சுற்றுலாத் தலங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொடைக்கானல் எரிச்சாலை அருகே சோதனையில் ஈடுபட்டிருந்த சுகாதாரத்துறை அதிகாரிகள், முகக்கவசம் இன்றி வருபவர்களுக்கு அபராதம் விதித்து வந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை மரித்தனர், காரில் முகக்கவசம் அணியாமல் இருந்துள்ளார் அருவி பல நாயகி அதிதி பாலன்,

முகக்கவசம் அணியாமல் காரில் பயணம் செய்த நடிகைக்கு அபராதம்! அதிகாரிகளுடன் காரசார வாக்குவாதம்..!

எனவே முகக் கவசம் அணியாததற்காக அவருக்குச் சுகாதாரத் துறையினர் அபராதம் என்று கூறினர். ஆனால் நடிகை அதிதி பாலன் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் , இதனையடுத்து நடிகை அதிதி பாலனுக்கு 200 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.

மேலும் தான் ஒரு வழக்கறிஞர் என்று கூறி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூரப்படுகிறது, அதை சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் அபராதத் தொகையைச் செலுத்தி விட்டுச் சென்றுள்ளார்.

banner

Related Stories

Related Stories