சினிமா

நடிகர்கள் விஜய், அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்..  மர்ம நபரை கைது செய்தது மரக்காணம் காவல்துறை!

நடிகர் அஜித்தின் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நடிகர்கள் விஜய், அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்..  மர்ம நபரை கைது செய்தது மரக்காணம் காவல்துறை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனா காரணமாக சினிமா தொடர்பான செய்திகள், அறிவிப்புகள் என ஏதும் வராத போதிலும் நடிகர், நடிகைகள் குறித்த செய்திகள், ஆடியோ, ட்ரெய்லர் போன்றவைகள் ஆன்லைன் மூலம் வெளிவந்த வண்ணமே உள்ளது.

இருப்பினும் உச்ச நட்சத்திரங்களான ரஜினி, விஜய், அஜித் போன்றோரின் வெளிவரவிருக்கும் தயாராகிக் கொண்டிருக்கும் படங்கள் குறித்த தகவல்கள் ஏதும் வராதது தத்தம் ரசிகர்களிடையே சற்று சோகத்தையே ஏற்படுத்தியுள்ளது.

நடிகர்கள் விஜய், அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்..  மர்ம நபரை கைது செய்தது மரக்காணம் காவல்துறை!

மாறாக, நடிகர்களின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவங்கள் அண்மைக்காலமாக தொடர்ந்து வருகிறது. ஏற்கெனவே நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் விஜய் ஆகியோரது வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி அழைப்பு வந்ததை அடுத்து அவரவர் வீடுகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில், வெடிகுண்டு ஏதும் இல்லை. வந்த அழைப்பு புரளி என தெரியவந்தது. இருப்பினும் இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. அவ்வகையில், தற்போது நடிகர் அஜித்தின் வீட்டிலும் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் அழைப்பு வந்தது.

சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் அஜித்தின் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாகச் சொல்லி கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று பிற்பகல் மிரட்டல் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து வழக்கம்போல், மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் விரைந்த போலிஸார் சோதனையில் ஈடுபட்டனர்.

நடிகர்கள் விஜய், அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்..  மர்ம நபரை கைது செய்தது மரக்காணம் காவல்துறை!

அதில், இந்த மிரட்டல் அழைப்பும் புரளிதான் என தெரியவந்துள்ளது. இருப்பினும் இவ்வாறு மிரட்டல் விடுக்கும் நபரை கண்டறிய விசாரணை நடத்தப்பட்டதில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியைச் சேர்ந்த புவனேஸ்வரன் என்ற 20 வயது இளைஞர் என கண்டுபிடிக்கப்பட்டது.

அதன் பின்னர், நேற்றிரவு அந்த இளைஞரை கைது செய்த மரக்காணம் போலிஸார் சென்னை நீலாங்கரை போலிஸாரிடம் ஒப்படைத்தனர். இதே இளைஞர்தான் முன்னதாக நடிகர் விஜய்யின் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்ததில் கைது செய்யப்பட்டவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

banner

Related Stories

Related Stories