சினிமா

#Vijay64 : மொத்தம் ஒன்றல்ல.. இரண்டல்ல.. மூன்று UPDATES - ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்திய படக்குழு !

விஜய் 64ன் 2வது போஸ்டர் வெளியாவது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

#Vijay64 : மொத்தம் ஒன்றல்ல.. இரண்டல்ல.. மூன்று UPDATES - ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்திய படக்குழு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் படம் தளபதி/விஜய் 64. இதில், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், அர்ஜூன் தாஸ், சாந்தனு, ஆண்ட்ரியா, கெளரி கிஷன், ஸ்ரீமன் உட்பட ஏராளமானோர் நடிக்கின்றனர்.

மாநகரம், கைதி படத்துக்கு பிறகு விஜயை வைத்து லோகேஷ் கனகராஜ் படம் இயக்குவதால், படத்தின் ஒவ்வொரு அப்டேட்டுகளுக்காகவும் ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கின்றனர்.

கோடை விடுமுறைக்கு படம் ரிலீசாகவிருப்பதால், படபிடிப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. கர்நாடகாவின் ஷிமோகாவில் இருக்கும் படக்குழு விரைவில் சென்னை திரும்பவுள்ளது.

நாளை (டிச.,31) மாலை 5 மணிக்கு விஜய் 64 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீசாகவுள்ளதால் உற்சாகமடைந்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஹேஷ்டேக்குகளை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். மேலும், புத்தாண்டையொட்டி ஃபர்ஸ்ட் லுக் வெளியாகவுள்ளது ரசிகர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

இந்நிலையில், புத்தாண்டு நாளான ஜனவரி 1ந்தேதி அன்று படத்தின் 2வது போஸ்டரை வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாகவும், அதில் விஜய் மற்றும் விஜய் சேதுபதியின் தோற்றம் இருக்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதுமட்டுமல்லாமல், விஜய் 64 படத்துக்கு மூன்று போஸ்டர்களை வெளியிட இருப்பதாகவும் அதில், ஃபர்ஸ்ட் லுக்கில் விஜயும், இரண்டாவதில் விஜய் & விஜய் சேதுபதி மற்றும் மூன்றாவது போஸ்டரில் படத்தின் முன்னணி கதாபாத்திரங்களை மையமாக வைத்தும் ரிலீசாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories