சினிமா

‘சூரரைப் போற்று’ டீசர் ரிலீஸ் எப்போது? : சூர்யா ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்!

நீண்ட நாட்களுக்கு பிறகு 'சூரரைப் போற்று' டீசர் குறித்த தகவல் வெளியானதால் ரசிகர்கள் ஆரவாரம்.

‘சூரரைப் போற்று’ டீசர் ரிலீஸ் எப்போது? : சூர்யா ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சுதா கொங்கரா - சூர்யா கூட்டணியில் முதன்முறையாக உருவாகி வரும் படம் ‘சூரரைப் போற்று’. இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை இயக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது இந்தப் படம்.

டிசம்பர் மாதம் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் கோடை விடுமுறைக்கு தள்ளிப்போனதால் சூரரைப் போற்று படத்தின் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

சூர்யாவின் 2D நிறுவனத்தின் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் சூரரைப் போற்று படத்துக்கு இசையமைத்து வருகிறார். இப்படத்தின் மாரா தீம் பாடலை சூர்யா பாடியிருந்தார். இப்பாடல் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

இந்நிலையில், மாரா தீம் இசையுடன் சூரரைப் போற்று படத்தின் டீசர் ஜனவரி மாதம் வெளியாகும் என இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

வெகு நாட்களுக்குப் பிறகு ‘சூரரைப் போற்று’ படத்தின் அப்டேட் கிடைத்ததும் மகிழ்ச்சியில் ஆழ்ந்த சூர்யா ரசிகர்கள் #SooraraiPottru மற்றும் #Maaratheme ஹேஷ்டேக்குகளையும் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories