சினிமா

ட்ரெண்டாகும் #SooraraiPottruTeaser ஹேஷ்டேக்: தேதியை அறிவித்தது சூர்யாவின் 2D நிறுவனம்! 

சூரரைப் போற்று படத்தின் டீசர் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டது தயாரிப்பு நிறுவனம்

ட்ரெண்டாகும் #SooraraiPottruTeaser ஹேஷ்டேக்: தேதியை அறிவித்தது சூர்யாவின் 2D நிறுவனம்! 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சுதா கொங்கரா - சூர்யா கூட்டணியில் உருவாகி வரும் படம் சூரரைப் போற்று. இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை இயக்கிய ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி வருகிறது இந்த படம்.

சூர்யாவின் 2D நிறுவனமே இந்த படத்தை தயாரித்து வருகிறது. ஜி.வி. பிரகாஷ் இசையில் உருவாகி வரும் இந்த படத்துக்கான மாரா கதாப்பாத்திரத்தின் தீம் பாடலை சூர்யாவே பாடியுள்ளார். இது சமீபத்தில் வைரலானது.

டிசம்பர் மாதம் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் கோடை விடுமுறைக்கு தள்ளிப்போனதால் சூரரைப் போற்று படத்தின் பின்னணி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கார்த்தி - ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள தம்பி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது இதில், சூரரைப் போற்று படத்தின் டீசர் வெளியீட்டு தொடர்பாக 2டி நிறுவனத்தின் இணை தயாரிப்பாளர் ராஜ்சேகரபாண்டியன் அறிவித்துள்ளார்.

அதில், சூரரைப் போற்று படத்தின் டீசர் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என தம்பி ஆடியோ வெளியீட்டு மேடையில் அறிவித்தார்.

இதனையடுத்து உற்சாகத்தில் ஆழ்ந்த சூர்யா ரசிகர்கள் ட்விட்டரில் #SooraraiPottruTeaser என்ற ஹேஷ்டேக்கில் பதிவிட்டு ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories