சினிமா

சூர்யாவின் ’சூரரைப் போற்று’ படத்தின் தீம் பாடலைப் பாடியது இவரா? - ஜி.வி பிரகாஷ் வெளியிட்ட சீக்ரெட் !

சூரரைப் போற்று படத்தின் ’மாரா’ தீம் மியூசிக் பணிகள் முடிவடைந்ததாக ஜிவி பிரகாஷ் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

சூர்யாவின் ’சூரரைப் போற்று’ படத்தின் தீம் பாடலைப் பாடியது இவரா? - ஜி.வி பிரகாஷ் வெளியிட்ட சீக்ரெட் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இறுதிச்சுற்று திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ’சூரரைப் போற்று’ படத்தின் தீம் மியூசிக் தொடர்பாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளது சூர்யா ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

படத்தின் ஷூட்டிங் வேலைகள் முடிந்துவிட்ட நிலையில், பின்னணி பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது படக்குழு. அதில், சூரரைப் போற்று படத்தின், மாரா எனும் சூர்யாவின் கதாபாத்திரத்துக்கு ஸ்பெஷல் தீம் மியூசிக் தயார் செய்ய இருப்பதாக அண்மையில் ஜி.வி. பிரகாஷ் ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மாரா கதாபாத்திரத்துக்கான தீம் மியூசிக்கை சூர்யாவே பாடி முடித்துள்ளார் என்ற தகவலை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் ஜி.வி பிரகாஷ். இதனையடுத்து, ட்விட்டரில் #Maaratheme என்கிற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் முன்னிலையில் உள்ளது.

ஏற்கெனவே சூர்யா நடிப்பில் வெளியான அஞ்சான் மற்றும் வெங்கட்பிரபுவின் பார்ட்டி படங்களில் அவர் பாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories