சினிமா

'தர்பார்' சரவெடி பாடல்களுக்கு தயாராகுங்கள் - ஆடியோ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ரஜினி-ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகி வரும் ‘தர்பார்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது லைகா நிறுவனம்.

'தர்பார்' சரவெடி பாடல்களுக்கு தயாராகுங்கள் - ஆடியோ ரிலீஸ் தேதி அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

2020 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9ம் தேதி ரஜினியின் தர்பார் படம் ரிலீஸாகவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘தர்பார்’ படத்தின் மோஷன் போஸ்டரும், படத்தில் இடம்பெற்ற சும்மா கிழி என்ற பாடலும் அண்மையில் ரிலீஸாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் டிசம்பர் 7ம் தேதி பிரமாண்டமாக நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது, அதிகாரப்பூர்வமாக லைகா நிறுவனமே தர்பார் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா குறித்து ட்விட்டரில் அறிவித்துள்ளது.

அதில், டிசம்பர் 7ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் 5 மணிக்கு தர்பார் இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது என்றும், சரவெடி பாடல்களுக்கு தயாராகுங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories