சினிமா

ரஜினி ‘தர்பார்’ : இன்னைக்கும் ராஜா நான் கேட்டுப் பாரு - வெளியானது #Chummakizhi பாடல் வரிகள் !

தர்பார் படத்தில் ரஜினியின் அறிமுகப் பாடலாக எஸ்.பி.பி பாடியுள்ள பாடல் ரிலீசாகும் நேரம் குறித்த அறிவிப்பு வெளியானது.

ரஜினி ‘தர்பார்’ : இன்னைக்கும் ராஜா நான் கேட்டுப் பாரு - வெளியானது #Chummakizhi பாடல் வரிகள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ரஜினி - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகி வரும் ‘தர்பார்’ படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9ம் தேதி வெளியாகவுள்ளதாக தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்‌ஷன்ஸ் தெரிவித்திருந்தது.

படத்தின் ஷூட்டிங் வேலைகள் முடிந்து அடுத்தகட்ட பணியான போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுவென நடைபெற்று வருகின்றன. இதில், ரஜினி தனது டப்பிங் வேலைகளை வெறும் 4 நாட்களில் நடத்தி முடித்திருந்தார்.

ரஜினி ‘தர்பார்’ : இன்னைக்கும் ராஜா நான் கேட்டுப் பாரு - வெளியானது #Chummakizhi பாடல் வரிகள் !

இதற்கிடையே, நவ.,7ம் தேதி வெளியான படத்தின் மோஷன் போஸ்டரும், தீம் மியூஸிக்கும் ரஜினி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் பாடலுக்காக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், டிசம்பர் 7ம் தேதி சென்னையில் தர்பார் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற இருப்பதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ரஜினியின் அறிமுகப் பாடலாக பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய ‘சும்மா கிழி’ என்ற சிங்கிள் ட்ராக் நாளை (நவ., 27) ரிலீசாகவுள்ளது என அறிவித்த படக்குழு தற்போது பாடல் வெளியாகும் நேரத்தை அறிவித்து ரஜினியின் தர்பார் பட புது போஸ்டரையும் வெளியிட்டுள்ளது.

தமிழில் மட்டுமல்லாமல் இந்தி மற்றும் தெலுங்கிலும் ரஜினியின் தர்பார் ரிலீசாகவுள்ளதால், NapDeKilli என இந்தியிலும், DhummuDhooli என தெலுங்கிலும் சும்மா கிழி பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது என லைகா அறிவித்துள்ளது.

இதனையடுத்து, சமூக வலைதளத்தில் #Chummakizhi என்ற ஹேஷ்டேக்கை ரஜினி ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். முன்னதாக அனிருத் இசையில் கடைசியாக வெளியான ரஜினியின் ‘பேட்ட’ படத்தில் மரண மாஸ் என்ற பாடலை எஸ்.பி.பி பாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

27 ஆண்டுகளுக்குப் பிறகு போலிஸாக நடிக்கும் ரஜினிக்கு இந்த படத்தில் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் நிவேதா தாமஸ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் சும்மா கிழி பாடலின் ஒருசில வரிகளை பாடலாசிரியர் விவேக் வெளியிட்டுள்ளார்.

அதில், ''நெருப்புப் பேரோட நீ குடுத்த ஸ்டாரோட இன்னைக்கும் ராஜா நான் கேட்டுப் பாரு - சும்மா கிழி

கருப்புத் தோலோட சிங்கம் வரும் ஸ்சீனோட எடமே பத்திக்கும் அந்தமாரி - சும்மா கிழி'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories