சினிமா

“ஹாப்பி தீபாவளி ஃபோக்ஸ்” - ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தர்பார் படக்குழு!

தீபாவளியையொட்டி புதிய போஸ்டரை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது தர்பார் படக்குழு.

“ஹாப்பி தீபாவளி ஃபோக்ஸ்” - ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தர்பார் படக்குழு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினி முதன்முறையாக இணைந்து நடித்திருக்கும் படம் தர்பார். சந்திரமுகியை அடுத்து நயன்தாரா ரஜினிக்கு ஜோடியாக நடிக்கிறார்.

பேட்ட படத்துக்குப் பிறகு தர்பார் படத்துக்கும் இசையமைக்கிறார் அனிருத். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

எதிர்வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தர்பார் படம் வெளிவர உள்ளது. இந்த நிலையில், நாளை (அக்.,27) தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில் தர்பார் படத்தின் புது போஸ்டர் ஒன்றை வெளியிட்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளது படக்குழு.

இதற்கிடையில், வருகிற நவ.,7ம் தேதி தர்பார் படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் தீம் மியூசிக் வெளியிடப்படும் என இசையமைப்பாளர் அனிருத் அறிவித்திருந்தார். ரஜினி ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் தர்பார் புதிய போஸ்டரை ரஜினி ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து மகிழ்ந்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories