சினிமா

அதிரடியாகத் துவங்கியது ‘அஜித் 60’ ஷூட்டிங் - #Ajith60 பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்ஸ்!

அஜித் 60 படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையோடு துவங்கியுள்ளது.

அதிரடியாகத் துவங்கியது ‘அஜித் 60’ ஷூட்டிங் - #Ajith60 பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்ஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான படம் ‘நேர்க்கொண்ட பார்வை’. இப்படத்திற்கு மக்களிடையே அமோக வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.

அஜித்தின் 60வது படமான இதன் ஷூட்டிங் ஆகஸ்ட் மாதமே துவங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆரம்பகட்ட வேலைகள் தாமதமானதால் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் துவங்கவில்லை. தற்போது திரைக்கதைக்கான ஆரம்பக்கட்ட வேலைகள் முடிந்து விட்டதால், பூஜையோடு படப்பிடிப்பை துவங்கியுள்ளனர்.

அதிரடியாகத் துவங்கியது ‘அஜித் 60’ ஷூட்டிங் - #Ajith60 பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்ஸ்!

அஜித்தின் 60வது படமான இப்படத்திற்கு ‘வலிமை’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. அஜித் - சிறுத்தை சிவா கூட்டணியில் உருவான நான்கு படங்களும் ‘V’ ஆங்கிலே எழுத்திலேயே தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

போனி கபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தமாகியிருக்கிறார். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார்.

அதிரடியாகத் துவங்கியது ‘அஜித் 60’ ஷூட்டிங் - #Ajith60 பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்ஸ்!

மங்காத்தா, ஆரம்பம், என்னை அறிந்தால் ஆகிய படங்களை அடுத்து மீண்டும் போலிஸ் கேரக்டரில் நடிக்கும் அஜித்துக்கு கார் ரேஸ் தொடர்பான காட்சிகளும் இந்தப் படத்தில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது நல்ல கமர்ஷியல் ஆக்ஷன் படம் என்றும் இந்தப் படம் அஜித்தின் வெற்றிப் பட்டியலில் இணையும் என்றும் கூறப்படுகிறது.

banner

Related Stories

Related Stories