சினிமா

“ரஜினியின் 168வது படம்” : முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சன் பிக்சர்ஸ் - ரசிகர்கள் கொண்டாட்டம்!

தர்பார் படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் ரஜினியின் 168வது படம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

“ரஜினியின் 168வது படம்” : முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சன் பிக்சர்ஸ் - ரசிகர்கள் கொண்டாட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரஜினியின் ‘பேட்ட’ படமும், அஜித்தின் ‘விஸ்வாசம்’ படமும் வெளியானது.

பேட்ட படத்தை விட, விஸ்வாசம் படம் விற்பனை மற்றும் விமர்சன ரீதியாக சூப்பர்ஹிட் அடித்திருந்தது. இதனையடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படம் நடிப்பதற்கு நடிகர் ரஜினி விருப்பம் தெரிவித்ததாகக் கூறப்பட்டது.

அதனை உறுதி செய்யும் வகையில் சிறுத்தை சிவா இயக்கத்தில் கிராமத்துக் கதையில் ரஜினி நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது.

“ரஜினியின் 168வது படம்” : முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சன் பிக்சர்ஸ் - ரசிகர்கள் கொண்டாட்டம்!

இந்த நிலையில், எந்திரன், பேட்ட படத்துக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த்துடன் மூன்றாவது முறையாக கூட்டணி வைத்து அவரது 168வது படத்தை தயாரிக்க இருக்கிறது சன் பிக்சர்ஸ் நிறுவனம். மேலும், சிறுத்தை சிவாதான் இந்தப் படத்தை இயக்குகிறார் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினியின் கிராமத்து கதைகளிலேயே பிரமாண்ட வெற்றிப் படமாக அமைந்தது முரட்டுக்காளை. தற்போது அவரது 168வது படமும் கிராமத்து பின்னணி கொண்ட படமாக இருக்கும் என்பதால் அதன் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு மேலும் கூடியுள்ளது.

ரஜினிகாந்த் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் தர்பார் பட வேலைகளில் உள்ளதால் கூடிய விரைவில் இந்த படத்துக்கான பணிகளில் இறங்குவார் என தெரிகிறது.

மேலும், 168வது படம் குறித்த அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் ட்விட்டரில் அறிவித்ததை அடுத்து #Thalaivar168 என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

banner

Related Stories

Related Stories