சினிமா

‘கண்ணான கண்ணே’ பாடலை பாடி அசத்திய பார்வையற்ற சிறுவன்: வாய்ப்பளிப்பதாக உறுதியளித்த டி.இமான் (வீடியோ)

பார்வையற்ற சிறுவன் ஒருவன் பாடிய பாடல் இணையத்தில் வைரலானதை அடுத்து திரைப்படத்தில் பாட வாய்ப்பளிப்பதாக இசையமைப்பாளர் டி.இமான் உறுதியளித்து ட்வீட் செய்துள்ளார்.

 ‘கண்ணான கண்ணே’ பாடலை பாடி அசத்திய பார்வையற்ற சிறுவன்: வாய்ப்பளிப்பதாக உறுதியளித்த டி.இமான் (வீடியோ)
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அண்மைக் காலங்களாக சமூக வலைதளம் மூலம் சாதாரண மக்கள் பலர் பிரபலமடைந்து வருகின்றனர். அவ்வகையில், மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ரயில் நிலையத்தில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த ராணு மோண்டால் என்ற பெண்மணி, லதா மங்கேஷ்கர் பாடிய பாடலை பாடி அசத்தியதுடன் சமூக வலைதளத்தில் வைரலானார்.

இதனையடுத்து, இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ராணு பாடுவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டது மட்டுமல்லாமல் அவர் இந்தி திரையுலகில் பாடகியாகவும் தற்போது அவதாரம் எடுத்துள்ளார்.

இதேபோல், தமிழகத்திலும் ஒரு நிகழ்வு நடந்துள்ளது. கிருஷ்ணகிரியைச் சேர்ந்த திருமூர்த்தி என்ற பார்வையற்றச் சிறுவன் பாடிய பாடல் ஒன்று ட்விட்டரில் வைரலாகியுள்ளது.

விஸ்வாசம் படத்தில் வரும் தந்தை, மகள் உறவை குறிக்கும் கண்ணான கண்ணே என்று சித் ஸ்ரீராம் பாடிய பாடலை தன்னுடைய இனிமையான குரலில் பாடி அசத்தியுள்ளார் திருமூர்த்தி.

இந்த சிறுவன் பாடிய பாடல் இணையத்தில் வைரலாக இதனைக் கண்ட இசையமைப்பாளர் டி.இமான், சிறுவன் திருமூர்த்தி குறித்த விவரங்களை தெரிவிக்குமாறு ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

அதன் பிறகு திருமூர்த்தியின் விவரங்களை தந்ததற்கு நன்றி தெரிவித்தது மட்டுமல்லாமல் கூடிய விரைவில் திரைப்படத்தில் பாட வைப்பதாகவும் உறுதி அளித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதற்கு பலர் பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories