சினிமா

அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ ட்ரெய்லர் இன்று மாலை ரிலீஸ்!

பாலிவுட் படம் பிங்க் ரீமேக்கான நேர்கொண்ட பார்வை படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை வெளியிடப்பட உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ ட்ரெய்லர் இன்று மாலை ரிலீஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அமிதாப் பச்சன், டாப்சி நடிப்பில் இந்தியில் வெளியான படம் பிங்க். இது பாலிவுட் திரையுலகில் சக்கப்போடு போட்டது. இப்படத்தின் தமிழ் ரீமேக் ஹெச். வினோத்தின் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகர் வித்யா பாலன் நடிக்கிறார்.

அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ ட்ரெய்லர் இன்று மாலை ரிலீஸ்!

நேர்கொண்ட பார்வை என தலைப்பிடப்பட்டிருக்கும் இந்த படத்தை பிரபல நடிகர் ஸ்ரீதேவியின் கணவரான போனி கபூர் தயாரித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், ஆகஸ்ட் 10ம் தேதி நேர்கொண்ட பார்வை படம் ரிலீசாக உள்ள நிலையில் இன்று மாலை 6 மணிக்கு படத்தின் ட்ரெய்லர் வெளியாகவுள்ளது என படக்குழு அறிவித்திருக்கிறது. இதனால் அஜித்தின் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேலும், படத்தில்அஜித்தின் பெயர் நீதி தேவன் என்றும், வித்யா பாலனின் பெயர் குணவதி தேவன் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories