சினிமா

சிம்புதேவன் இயக்கும் ‘கசட தபற’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

‘கசட தபற’ படம் 6 தனித்தனிப் பகுதிகளாக உருவாகி இருக்கிறது.

சிம்புதேவன் இயக்கும் ‘கசட தபற’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘கசட தபற’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் படம் 6 முக்கியக் கதாபாத்திரங்களை மையமாக வைத்து 6 பகுதிகளாக உருவாகி இருக்கிறது. ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு குழுவோடு இணைந்து படத்தை இயக்கியிருக்கிறார் சிம்புதேவன்.

அதன்படி, இப்படத்தில் 6 இசையமைப்பாளர்கள், 6 ஒளிப்பதிவாளர்கள், 6 படத்தொகுப்பாளர்கள் பணியாற்றியுள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன், ஜிப்ரான், சாம்.சி.எஸ், பிரேம்ஜி, ஷான் ரோல்டன் உள்ளிட்ட 6 பேரும் இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர்.

சாந்தனு, சந்தீப் கிஷன், ஹரிஷ் கல்யாண், வெங்கட்பிரபு, பிரேம்ஜி, ரெஜினா, ப்ரியா பவானி சங்கர், விஜயலட்சுமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிளாக் டிக்கெட் கம்பெனி சார்பில் இயக்குநர் வெங்கட்பிரபு மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் இணைந்து தயாரித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories