சினிமா

விஜய் சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

‘சங்கத்தமிழன்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ள விஜய் சேதுபதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்று முன்பு வெளியானது.

விஜய் சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

விஜய் சேதுபதி நடிப்பில், ‘சிந்துபாத்’, ‘மாமனிதன்’, ‘லாபம்’, ‘கடைசி விவசாயி’ என அடுத்தடுத்து பல படங்கள் திரைக்குவர காத்திருக்கின்றன. இவற்றைத் தொடர்ந்து ‘வாலு’, ‘ஸ்கெட்ச்’ படங்களை இயக்கிய விஜய் சந்தர் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி.

இப்படத்தை விஜயா ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ‘சங்கத்தமிழன்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்று முன்பு வெளியானது.

‘சங்கத்தமிழன்’ படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ராஷி கன்னா நடிக்கிறார். காமெடியனாக சூரி நடிக்கிறார். விவேக் மெர்வின் இப்படத்திற்கு இசையமைக்கிறார்கள்.

banner

Related Stories

Related Stories