சினிமா

“மீண்டும் ரஜினிக்கு ஜோடியான நயன்தாரா” - தர்பார் அப்டேட்!

ரஜினிகாந்த் மற்றும் ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணியில் உருவாகிவரும் தர்பார் படபிடிப்பில் நடிகை நயன்தாரா கலந்துகொண்டுள்ளார்.

“மீண்டும் ரஜினிக்கு ஜோடியான நயன்தாரா” - தர்பார் அப்டேட்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நடிகர் ரஜினிகாந்துடன் முதன் முறையாக இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணி அமைத்துள்ள படம் தர்பார் என பெயரிடப்பட்டுள்ளது.

சந்திரமுகி, குசேலன் படங்களை அடுத்து ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு ரஜினிக்கு ஜோடியாக தர்பார் படத்தில் இணைந்துள்ளார் நடிகை நயன்தாரா.

பேட்ட படத்தை அடுத்து இந்த படத்திற்கும் இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் படத்தை தயாரிக்கிறது.

ஏப்.,9ம் தேதி தர்பார் படத்துக்கான பூஜைகள் தொடங்கிய நிலையில் 10ம் தேதியே படத்தின் படபிடிப்பு வேலைகள் மும்பையில் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. தேர்தலில் வாக்களிப்பதற்காக சென்னை வந்த ரஜினி மீண்டும் மும்பை சென்றார்.

இந்நிலையில், இன்று (ஏப்.,23) முதல் தர்பார் படபிடிப்பில் நடிகை நயன்தாரா கலந்து கொண்டுள்ளார் என லைகா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

இந்தப் பதிவை ரீட்வீட் செய்த இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ், நயன் தாராவுடன் மீண்டும் பணியாற்றுவது மகிழ்ச்சியாக உள்ளது என தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தமிழில் உருவான ப்ளாக் பஸ்டர் படமான கஜினியில் நயன்தாரா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories