உலகம்
திடீர் தாக்குதல் நடத்திய ஹமாஸ் : 24 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு - இஸ்ரேல் பிரதமரின் கருத்து என்ன ?
இஸ்ரேல் -பாலஸ்தீனம் இடையே கடந்த பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வருகிறது. பாலஸ்தீன பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டு வந்த குடியேற்றம் மற்றும் அல்- அக்ஸா மசூதி பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு போன்றவற்றால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு வந்தது.
இந்த சூழலில் கடந்த மாதம் அக்டோபர் 7-ம் தேதி, இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியது. மேலும், இஸ்ரேலின் பல பகுதியில் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதில் நூற்றுக்கணக்கான இஸ்ரேல் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் கொல்லப்பட்டனர். அதோடு ஏராளமானோரை ஹமாஸ் அமைப்பு பணயக்கைதிகளாக பிடித்து வைத்தது.
ஹமாஸ் அமைப்பின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் விமானங்கள் மூலமும், ஏவுகணைகளை அனுப்பியும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல் இதுவரை 25 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவி பாலஸ்தீன குடிமக்கள் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது.
இந்த நிலையில், ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 24 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் ராணுவத்தினரால் ஆக்கிரமைக்கப்பட்டுள்ள காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவத்தினர் அடுத்த தாக்குதலுக்காக வெடிபொருள்களை தயார் செய்துகொண்டிருந்தனர்.
அப்போது அங்கு திடீரென வந்த ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் ராணுவத்தினர் மீது சரமாரி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 24 ராணுவ வீரர்கள் உயிரிழந்த நிலையில், ஏராளமான வீரர்கள் படுகாயமடைந்தனர். இந்த போரில் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய பெரும் தாக்குதலாக இந்த சம்பவம் பார்க்கப்படுகிறது.
இது குறித்து கருத்து தெரிவித்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு “போர் தொடங்கியதில் இருந்து, இந்த நாள் மிக கடினமான நாட்களில் ஒன்று. முழுமையான வெற்றி கிடைக்கும் வரை நாங்கள் போரை நிறுத்தமாட்டோம்" என்று கூறியுள்ளார்.
Also Read
-
“மகளிர் உரிமைத் தொகையை தடுக்க சிலர் சூழ்ச்சி செய்தார்கள்.. ஆனால்...” - துணை முதலமைச்சர் உதயநிதி !
-
5 ஆண்டுகளில் பிரம்மாண்டமான வளர்ச்சி... 10 அத்தியாயங்களை பட்டியலிட்ட பொருளாதார ஆய்வறிக்கை - முழு விவரம்!
-
மக்களின் பேராதரவோடு... 100 தொகுதிகளை நெருங்கும் ‘தமிழ்நாடு தலைகுனியாது’ பரப்புரை !
-
அருவருக்கத்தக்க பேச்சு.. திமுக பெண் MP-க்கள் முதல் திரிஷா வரை.. நயினார் நாகேந்திரனுக்கு குவியும் கண்டனம்!
-
“உயர்கல்வித்துறை சார்பில் ரூ.542.02 கோடியில் புதிதாக 15 கட்டடங்கள் திறப்பு!” : முழு விவரம் உள்ளே!