Viral

10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த ஓநாய் இனம் : மீண்டும் உயிர் கொடுத்த ஆராய்ச்சியாளர்கள்!

அழிந்துபோன இனங்களில் கிடைத்த எலும்புகளை கொண்டு, மரபணு ஆராய்ச்சிகள் உலகம் முழுவதும் பல கோடிகள் கொட்டி ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது. தற்போது கிட்டத்தட்ட 13 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அழிந்துபோன ஓநாய் இனத்திற்கு அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் உயிர் கொடுத்து இருக்கிறார்கள்.

மேற்கத்திய நாடுகளில் டையர் என்ற ஓநாய் இனம் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்துள்ளது. பின்னர் கால ஓட்டத்தில் இந்த இனம் அழித்துவிட்டது. HBO தொலைக்காட்சி தொடரில் வெளிவந்து உலக புகழ்பெற்ற ​​'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' தொடரில் இந்த ஓநாய்கள் காட்சி படுத்தப்பட்டு இருக்கும்.

தற்போது இருக்கும் ஓநாய் இனத்தை காட்டிலும், இந்த ஓநாய் இனம் மிகவும் ஆக்ரோஷமாக வேட்டையாடும் தன்மை கொண்டவை. இந்த ஓநாய் இனத்திற்கு மீண்டும் உயிர் கொடுக்கும் முயற்சியில் மெரிக்காவைச் சேர்ந்த பிரபல மரபணு ஆய்வு நிறுவனம் களமிறங்கியது.

அதன்படி,சுமார் 13 ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஓநாயின் பல் படிமம், மண்டையோடு துண்டு ஆகியவற்றை ஆய்வு செய்து அழிந்த ஓநாயின் மரபணுவை பிரித்தெடுத்து சேகரித்தனர்.

பின்னர் இந்த ஓநாய் இனத்தின் வழிதோன்றல்களாக பார்க்கப்படும், சாம்பல் நிற ஓநாய்களின் மரபணுக்களுடன் கலந்து புதிய மாற்றங்களை ஏற்படுத்தினர். இந்நிலையில் இந்த சாம்பல் நிற ஓநாய்கள் மூன்று குட்டிகளை ஈன்றுள்ளது. இந்த குட்டிகள் அழிந்துபோன "டையர்" இன ஓநாய் இனத்தின் பன்புகளையும், நிரங்களையும் அப்படியே கொண்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த ஓநாய் இனத்திற்கு மீண்டும் மறுபணு மூலம் உயிர் கொடுத்துள்ளது உலகம் முழுவதும் ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் புதிய நம்பிக்கையை விதைத்துள்ளது.

Also Read: ‘எம்புரான்’ படத்தில் 3 நிமிட காட்சிகள் ரத்து! : திரையிலும் கருத்து சுதந்திரத்தை பறிக்கும் வலதுசாரிகள்!