அரசியல்

‘எம்புரான்’ படத்தில் 3 நிமிட காட்சிகள் ரத்து! : திரையிலும் கருத்து சுதந்திரத்தை பறிக்கும் வலதுசாரிகள்!

திரைப்படத்தின் வில்லனுக்கு உண்மையான கொடுஞ்செயல் புரிந்தவனின் பெயர் வைக்கக்கூட உரிமை இல்லையா?

‘எம்புரான்’ படத்தில் 3 நிமிட காட்சிகள் ரத்து! : திரையிலும் கருத்து சுதந்திரத்தை பறிக்கும் வலதுசாரிகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

இந்திய திரைத்துறையின் கருத்து சுதந்திரம் நாளுக்கு நாள். நசுக்கப்படுவது அதிகரித்து கொண்டு வருகிறது. குறிப்பாக, திரைப்படங்கள் அல்லது ஆவணப்படங்களில் இடம்பெறும் அரசியல் சார்ந்த கருத்துகள், ஒன்றியத்தில் ஆட்சி கொண்டிருக்கும் பா.ஜ.க.விற்கோ அல்லது பா.ஜ.க.வின் கரு எனப்படுகிற ஆர்.எஸ்.எஸிற்கோ எதிராக அமைந்தால், அவை உடனடியாக நீக்கப்படுகின்றன.

இதற்கு நடிகர் மோகன்லால் நடித்து, பிரித்விராஜ் இயக்கி நடித்துள்ள எம்புரான் திரைப்படமும் (மார்ச் 27 வெளியானது) எடுத்துக்காட்டாய் அமைந்துள்ளது.

வலதுசாரி அமைப்புகளின் வரலாறு, வலதுசாரி தலைவர்களால் மேடை பேச்சுகளில் சித்தரிக்கப்படுவதும்; உண்மை நடவடிக்கைகள், மறைக்கப்படுவதும், பா.ஜ.க ஆட்சியில் இயல்பான நடவடிக்கையாக மாறியுள்ளது.

கடந்த 2002ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தின் முதல்வராக, தற்போதைய பிரதமர் மோடி அவர்கள் பதவிவகித்தபோது, குஜராத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக அரங்கேறிய வன்முறை இன்றளவும், பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

இஸ்லாமிய பெண்களும், குழந்தைகளும் இரக்கமின்றி வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட கொடூரங்கள் நாடறிந்த உண்மை என்றாலும், அச்சம்பவத்தில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளிகளுக்கு (ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட வலதுசாரி அமைப்புகளின் தலைவர்கள்) முழு தண்டனை வழங்கப்படாமல், விடுதலை வழங்கப்பட்டது நாடறிந்திருக்கிறதா என்ற கேள்வியும் உள்ளது.

‘எம்புரான்’ படத்தில் 3 நிமிட காட்சிகள் ரத்து! : திரையிலும் கருத்து சுதந்திரத்தை பறிக்கும் வலதுசாரிகள்!

இவ்வாறான சூழலில், எம்புரான் திரைப்படம் வணிகம் சார்ந்து எடுக்கப்பட்ட திரைப்படமாக இருந்தாலும், அதில் இச்சம்பவத்தின் சாயல்கள் இடம்பெற்றுள்ளது என்ற குற்றச்சாட்டை வைத்து, எம்புரான் வில்லன் கதாபாத்திரத்தின் பெயரை மாற்றுகிற அளவிற்கு நெருக்கடி கொடுத்துள்ளது வலதுசாரி அமைப்புகள்.

இதன்வழி, திரைப்படத்தின் வில்லனுக்கு உண்மையான கொடுஞ்செயல் புரிந்தவனின் பெயர் வைக்கக்கூட உரிமை இல்லையா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த 2023ஆம் ஆண்டு, குஜராத் கலவரத்தை தழுவி பிபிசி ஊடகத்தால் எடுக்கப்பட்ட ஆவணப்படம், ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க.வின் உண்மை முகத்தை வெளிப்படுத்துவதாய் அமைந்துள்ளது என்ற ஒற்றை காரணத்திற்காக, இந்தியாவில் தடை செய்யப்பட்டதும், இவ்வேளையில் நாம் நினைவில் கொள்ள வேண்டிய செய்தி.

இந்தியாவில் எடுக்கப்படும் பெரும்பான்மை திரைப்படங்களில் இஸ்லாமியர்களையும், கிறிஸ்தவர்களையும் எளிதாக வில்லன்களாக சித்தரிக்க உரிமை தரும் ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க., வலதுசாரிகளின் உண்மையான வில்லத்தனத்தை கடுகளவிலும் மக்கள் தெரிந்து விழிப்புணர்வு அடையக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறது.

ஆனால், இதனை எதிர்த்து மேல்முறையிடும் இடத்தில் இருக்கிற படக்குழுவினர், ஆர்.எஸ்.எஸ்-ன் அழுத்தத்திற்கு அடிபணியும் நெருக்கடிக்கு ஆளாகி வருவது வருத்தத்திற்குரியதாய் அமைந்துள்ளது.

banner

Related Stories

Related Stories