Viral

திடீரென சுழல்வதை நிறுத்தி எதிர்திசையில் சுழலும் பூமியின் மைய கரு.. அறிவியல் இதழ் கட்டுரையால் பரபரப்பு!

உலகம் தன்னை சுற்றி பூமியையும் சுற்றி வருவது நாம் அனைவரும் அறிந்ததுதான். ஆனால் பலரும் அறியாத ஒரு விஷயம் என்ன என்றால் பூமியை போலவே பூமியின் கோர் என அழைக்கப்படும் மையப்பகுதியும் தன்னை தானே சுற்றி வருகிறது. இந்த சுழற்சி பூமியின் காலநிலையில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாகவும் நம்பப்படுகிறது.

பூமியின் நடுபகுதி அதிவெப்பமான எரிகுழம்புகளால் சூழப்பட்டுள்ளது. இது பந்துக்குள் மற்றொரு பந்து சுற்றுவதைப் போல பூமியின் சுழற்சியை தாண்டி இந்த பூமியின் மையக் கோளமும் சுற்றி வருகிறது. இந்த பூமியின் மையக் கோளத்தின் சுழற்சியானது தற்போது தனது வேகத்தை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து ஒரு கட்டத்தில் சுழலாமல் நின்று பின்னர் தற்போது எதிர்திசையில் சுழன்று வருவதாக பிரபல அறிவியல் இதழில் கட்டுரை வெளியாகியுள்ளது.

Nature Geoscience journal என்னும் பிரபல அறிவியல் இதழில் வெளியான இதுகுறித்த அறிக்கை பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில், கடந்த 60 ஆண்டுகளாகப் பூமியில் ஏற்பட்ட பல நிலநடுக்கங்கள் காரணமாக பூமியின் மையக் கோளம் தனது வேகத்தை படிப்படியாக குறைத்து கடந்த 2009 ஆம் ஆண்டு சுழல்வதை முழுவதுமாக நிறுத்தியுள்ளது. அதனபின்னர் கொஞ்சம் கொஞ்சமாக எதிர்திசையில் அது சுழலத்தொடங்கியுள்ளது.

இந்த சுழற்சி குறித்த தகவல் பீக்கிங் பல்கலைக்கழகத்திலிருக்கும் நில அதிர்வலை ஆராய்ச்சி நிலையத்தின் ஆராய்ச்சி மூலம் தெரியவந்துள்ளதாக அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இது போன்ற மாற்றம் புதிதானது அல்ல என்றும், இதற்கு முன்னரே கடந்த 1970 களிலும், இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது என்றும், எதிர்காலத்தில் 2040 ஆம் ஆண்டிலும் இதேபோன்ற ஒரு சம்பவம் நடக்கும் என்றும் இந்த ஆய்வு கட்டுரை தெரிவித்துள்ளது.

எனினும், இது போன்ற மாற்றங்களால் பூமியில் அசாதாரணமான நிகழ்வுகள் ஏதும் நிகழாது என்றும், இதன் காரணமாக அச்சப்பட எந்த தேவையும் இல்லை என்றும் அந்த ஆய்வு கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பூமியின் மையக் கோளத்தின் சுழற்சி வேகம் குறித்து துல்லியமாக அறிந்துகொள்ள முடியாது என்றாலும் நிலநடுக்கங்கள் மற்றும் அதன் அதிர்வை வைத்து மையக் கோளத்தின் பண்பு கணிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இந்த கட்டுரை முடிவுகள் எழுதப்பட்டுள்ளது.

Also Read: 360 டிகிரி வீரருக்கே இந்த நிலைமையா ? -சூரியகுமார் யாதவை முற்றிலுமாக முடக்கிய நியூஸிலாந்து வீரர் !