விளையாட்டு

360 டிகிரி வீரருக்கே இந்த நிலைமையா ? -சூரியகுமார் யாதவை முற்றிலுமாக முடக்கிய நியூஸிலாந்து வீரர் !

360 டிகிரி வீரர் என புகழப்பட்ட சூரியகுமார் டி20யில் ஒரு ஓவரை மெய்டன் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

360 டிகிரி வீரருக்கே இந்த நிலைமையா ? -சூரியகுமார் யாதவை முற்றிலுமாக முடக்கிய நியூஸிலாந்து வீரர் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

சமீப காலமாக இந்திய அணியின் தவிர்க்கமுடியாத வீரராக முன்னேறியுள்ளார் சூரியகுமார் யாதவ். இந்தியாவின் 360 டிகிரி, இந்தியாவின் ஏபி டிவிலியர்ஸ் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் அளவு சிறப்பாக ஆடி வருகிறார். இந்திய அணியின் முக்கிய வெற்றிகளுக்கு காரணமாகவும் திகழ்ந்து வருகிறார்.

நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி சூரியகுமாரை நம்பியே களமிறங்கியது என்று சொல்லும் அளவு சிறப்பாக ஆடி வருகிறார். அவரும் விராட் கோலியும் இந்திய அணியின் நம்பிக்கையாக இருந்து வருகிறார்கள். இந்த தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி முதல் இடத்திலும், சூரியகுமார் மூன்றாவது இடத்திலும் இருந்தனர்.

360 டிகிரி வீரருக்கே இந்த நிலைமையா ? -சூரியகுமார் யாதவை முற்றிலுமாக முடக்கிய நியூஸிலாந்து வீரர் !

அதனைத் தொடர்ந்து தற்போது முடிந்த இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரின் மூன்றாவது போட்டியில் ருத்ரதாண்டவம் ஆடிய சூரியகுமார் இதில் சதமடித்ததன் மூலம் டி20 போட்டியில் தனது 3-வது சதத்தை அவர் நிறைவு செய்தார். மேலும், இந்தியாவில் தனது முதல் சதத்தையும் சூரியகுமார் யாதவ் விளாசி அசத்தினார். ரோஹித் சர்மா மொத்தம் 4 சதங்களோடு முதல் இடத்தில் இருக்கும் நிலையில் சூரியகுமார் தற்போது 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

இந்த நிலையில், நேற்று நடைபெற்ற நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் முதலில் ஆடிய நியூஸிலாந்து அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய இந்திய அணி தொடக்கத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

360 டிகிரி வீரருக்கே இந்த நிலைமையா ? -சூரியகுமார் யாதவை முற்றிலுமாக முடக்கிய நியூஸிலாந்து வீரர் !

பின்னர் சூரியகுமார் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஆகியோர் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த வீரர்களில் வாஷிங்டன் சுந்தர் மட்டுமே இறுதிவரை போராடி அரைசதம் அடித்து கடைசி ஒவரில் ஆட்டமிழந்தார். இறுதியில் இந்திய அணி 155 ரன்கள் மட்டுமே குடித்து தோல்வியைத் தழுவியது.

இந்த போட்டியில் தொடக்கத்தில் இந்திய வீரர்கள் விக்கெட்டுகளை இழந்த நிலையில், 6-வது ஓவரை நியூஸிலாந்து வீரர் சான்ட்னர் வீச அந்த ஓவரை இந்திய வீரர் சூரியகுமார் ரன்ஏதும் குவிக்காமல் மெய்டன் செய்தார். 360 டிகிரி வீரர் என புகழப்பட்ட சூரியகுமார் டி20யில் ஒரு ஓவரை இப்படி மெய்டன் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விக்கெட் விழுந்ததன் காரணமாகதான் அவர் அப்படி செய்தார் என்று சிலரும், உண்மையில் சூர்யகுமாரால் சான்ட்னர் பந்துவீச்சை ஆடமுடியவில்லை என்றும் ரசிகர்கள் வெவ்வேறு விதமாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories