Viral
இது எல்லாம் ஒரு துணியா?.. மணமகன் அனுப்பிய பரிசால் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்: நடந்தது என்ன?
உத்தரகாண்ட மாநிலம் அல்மோரா பகுதியைச் சேர்ந்த இளைஞருக்கு, நைனிடால் பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும் இருவீட்டார் பெற்றோர்கள் சமதத்துடன் திருமணம் பேசிமுடித்துள்ளனர். இதன்படி கடந்த ஜூன் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.
இதையடுத்து நவம்பர் மாதத்தில் திருமணத்தை நடத்துவது என இருவீட்டாரும் பேசி முடிவு செய்துள்ளனர். நிச்சயம் நடந்து முடிந்ததால் இளம் பெண்ணும் , இளைஞரும் காதலர்களைப் போல் பேசி பழகி வந்துள்ளனர்.
இந்நிலையில், தனது வருங்கால மனைவிக்குத் திருமண பரிசு கொடுக்க வேண்டும் என அந்த இளைஞர் நினைத்துள்ளார். இதன் படி ரூ. 10 ஆயிரத்திற்கு புது ஆடை வாங்கி அனுப்பியுள்ளார். இந்த உடையைப் பார்த்து மகிழ்ச்சியடைவதற்குப் பதில் அவர் கோவப்பட்டுள்ளார்.
மேலும் வருங்கால மனைவிக்கு இப்படியா மட்டமா துணி வாங்குவார்கள் என கூறி, அவருடன் நமக்கு செட் ஆகாது என பெற்றோர்களிடம் கூறி திருமணத்தை நிறுத்தும் படி கூறியுள்ளார். இதையடுத்து பெண் வீட்டார் மணமகனின் பெற்றோரிடம் நடந்தவற்றைக் கூறியுள்ளனர்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் திருமணத்திற்கான எல்லா ஏற்பாடும் செய்து முடித்தாகிவிட்டது. இப்போது வந்து இப்படிச் சொன்னால் எப்படி என கூறியுள்ளனர். ஆனால் அந்த பெண் திருமணம் வேண்டாம் என்பதில் உறுதியாக இருந்துள்ளார்.
இதனால் இந்த பிரச்சனை காவல் நிலையத்திற்குச் சென்றுள்ளது. இங்கு இருதரப்பிலும் விசாரணை நடத்திய போலிஸார் பிரச்சனையைச் சுமுகமாக முடித்துள்ளனர். திருமணம் நின்றதில் மகிழ்ச்சியாக மணமகளும், திருமணம் நின்றுவிட்டதே என்ற கவலையில் மாப்பிள்ளையும் காவல்நிலையத்திலிருந்து பிரிந்து சென்றுள்ளனர்.
Also Read
-
2026ஆம் ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜன.20 அன்று தொடக்கம்! : சபாநாயகர் அப்பாவு தகவல்!
-
திருவண்ணாமலையில் “வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம்- 2025!” : முழு விவரம் உள்ளே!
-
“தன்னலம் கருதா உழைப்புக்கு வாழும் சாட்சி தோழர் நல்லகண்ணு ஐயா!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!
-
“தமிழில் ‘வணக்கம்’ சொன்னால் போதுமா?” : ஒன்றிய அரசைக் கண்டித்த முரசொலி தலையங்கம்!
-
“நானே ஜெயித்ததுபோல இருக்கு”: SBI வங்கி தேர்வில் வெற்றி பெற்ற கமலிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!