
இந்தியாவின் ஆட்சியைக் கவிழ்த்து பொதுவுடைமை அரசாங்கத்தை நிறுவ முயற்சிப்பதாக 1948 காலக்கட்டத்தில் பல்வேறு ஊர்களில் பொதுவுடைமை தோழர்கள் கைது செய்யப்பட்டார்கள். பலரும் தலைமறைவு ஆனார்கள். பலரும் கைது செய்யப்பட்டார்கள். கைது செய்யப்பட்ட தோழர்களில் ஒருவர் நல்லகண்ணு ஐயா.
பொதுவுடைமைக் கருத்தியல் தமிழ்நாட்டில் வளர உழைத்ததில் தோழர் நல்லகண்ணுவின் பங்கு பெரும்பங்கு ஆகும். வரலாற்றில் தனிமனிதர்களின் பங்கை ஒப்புக் கொண்ட தத்துவம்தான் மார்க்சியம். அதன்படி வரலாற்றில் பெரும்பங்கு நல்லகண்ணு ஐயாவிற்கும் உண்டு.

அப்படியான தலைவரின் 101 ஆவது பிறந்தநாளையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டது பின்வருமாறு,
“தியாகத்தின் பெருவாழ்வு: தோழர் நல்லகண்ணு ஐயா 101-ஆவது பிறந்தநாள்!
விடுதலைப் போராட்ட வீரராகவும், விவசாயத் தொழிலாளர்களுக்கான போராளியாகவும் திகழ்ந்து, இன்றளவும் நமக்கு வழிகாட்டும் நூற்றாண்டு நாயகர், இந்தியப் பொதுவுடைமை இயக்கத்தின் முதுபெரும் தலைவர் ஐயா நல்லகண்ணு அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!
தன்னலம் கருதா உழைப்புக்கு வாழும் சாட்சியான, எண்ணற்ற இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டான தாங்கள் - நல்ல உடல்நலத்துடன் நீண்டநாட்கள் நிறைவாழ்வு வாழ்ந்திட விழைகிறேன்.”






