விளையாட்டு

"படுதோல்விக்கு பிறகும் உங்களுக்கு ஓய்வு தேவைதானா?".. ராகுல் ட்ராவிடை தாக்கிய முன்னாள் பயிற்சியாளர்!

நியூசிலாந்து தொடரில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் ட்ராவிட்க்கு ஓய்வு கொடுக்கப்பட்டதற்கு ரவி சாஸ்திரி விமர்சித்துள்ளார்.

"படுதோல்விக்கு பிறகும் உங்களுக்கு ஓய்வு தேவைதானா?"..  ராகுல் ட்ராவிடை தாக்கிய முன்னாள் பயிற்சியாளர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி நிச்சயம் கோப்பை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியுடன் மோசமாக தோல்வியடைந்தது.இந்த தோல்வியை அடுத்து இந்திய அணியை முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்த படுதோல்வியை அடுத்து இந்திய அணி நியூசிலாந்து அணியுடன் 3 டி20, மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. இந்த டி20 போட்டிக்கு இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா கேப்டனாக செயல்படுகிறார். அதேபோல் ஒருநாள் போட்டிக்கு தவான் தலைமையேற்றுள்ளார்.

"படுதோல்விக்கு பிறகும் உங்களுக்கு ஓய்வு தேவைதானா?"..  ராகுல் ட்ராவிடை தாக்கிய முன்னாள் பயிற்சியாளர்!

மேலும் மூத்த வீரர்கள் ரோகித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுள், முகமது ஷமி, தினேஷ் கார்த்திக், ரவிச்சந்திரன் அஸ்வின், பும்ரா, ஜடேஜா உள்ளிட்டோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் ட்ராவிட்டுக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

அவருக்குப் பதில் நியூசிலாந்திற்கு பயிற்சியாளராக வி.வி.எஸ். லஷ்மண் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே ஜிம்பாப்வே, அயர்லாந்து நாட்டில் நடைபெற்ற தொடரிலும் வி.வி.எஸ். லஷ்மான்தான் பயிற்சியாளராக இருந்தார். அப்போதும் ராகுல் ட்ராவிட் ஓய்விலிருந்தார்.

"படுதோல்விக்கு பிறகும் உங்களுக்கு ஓய்வு தேவைதானா?"..  ராகுல் ட்ராவிடை தாக்கிய முன்னாள் பயிற்சியாளர்!

தற்போது, டி20 உலக கோப்பை போட்டியில் தோல்வியடைந்த பிறகு விளையாடும் முதல் தொடரில் தலைமை பயிற்சியாளர் ராகுல் ட்ராவிட் ஓய்வெடுத்துள்ளது விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி உங்களுக்கு ஏன் இவ்வளவு ஓய்வு என விமர்சித்துள்ளார்.

இது குறித்துப் பேசியுள்ள ரவி சாஸ்திரி, "வீரர்களையும், அணியையும் புரிந்து கொள்ள வேண்டும் என நினைப்பவன் நான். ஓய்வுமீது எனக்கு நம்பிக்கை இல்லை. வீரர்களுடனே பயணம் செய்தால்தான் அணியில் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க முடியும்.

பயிற்சியாளர்களுக்கு ஐ.பி.எல் தொடர் நடைபெறும் 3 மாத காலம் ஓய்வு கிடைக்கிறது. இதுவே போதுமானது. இதற்கு மேலும் ஓய்வு தேவைப்படாது. வீரர்களுடன் இருந்தால்தான் அவர்களை கவனிக்க முடியும். இதை யாராக இருந்தாலும் கடைப்பிடிக்க வேண்டும் என நான் நினைக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories