Viral
இதுவல்லவா சகோதர பாசம்.. Thalassemia நோயால் பாதிக்கப்பட்ட 2 சிறுமிகளின் உயிரை காப்பாற்றிய 9 வயது சகோதரன்!
மகாராஷ்டிரா மாநிலம், சௌக் கிராமத்தைச் சேர்ந்தவர் அமித். இவரது மனைவிக்கு ஏழு மாதங்களிலேயே குறைப்பிரசவத்தில் இரண்டு குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தைகளுக்கு ஸ்வரலி, ஸ்வரஞ்சலி என பெற்றோர் பெயர் வைத்துள்ளனர். மேலும் இவர்களுக்கு ராஜ் ஜாவத் என்ற மகனும் உள்ளான்.
பிறந்ததில் இருந்தே ஸ்வரலி மற்றும் ஸ்வரஞ்சலி ஆகிய இரண்டு பேருக்கும் அடிக்கடி கண் தொற்றுகள், முகம் வீங்குவது போன்ற நோய்கள் அடிக்கடி ஏற்பட்டு வந்துள்ளன. இதற்காகப் பெற்றோர் பல மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார்.
ஆனால் எதனால் இவர்களுக்கு இப்படி ஏற்படுகிறது என்று மருத்துவர்கள் யாருக்கும் தெரியவில்லை. பின்னர் இவர்கள் 4 வயது இருக்கும்போதுதான் தலசீமியா நோய் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து பெற்றோர் உறவினர்களிடம் கடன்களை வாங்கி மகளுக்குச் சிகிச்சைக்காக மருத்துகளை வாங்கி வந்துள்ளனர்.
பின்னர் மகள்களின் மருத்துவச் சிகிச்சைக்காகப் பெற்றோர்கள் அமித், அபர்ணா ஆகிய இருவரும் முப்பை, புனேவில் உள்ள பல மருத்துவமனைகளை சற்றி வந்துள்ளனர். பின்னர் மும்பையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் இருவருக்கும் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது இருவரும் எலும்பு மஜ்ஜை தேவைப்படுவதாக மருத்துவர்கள் பெற்றோர்களிடம் கூறியுள்ளனர். பிறகு தந்தை கூறும் சூப்பர் ஹீரோ கதைகளை கேட்ட வளர்ந்த சகோதரர் ராஜ் ஜாதவ், தங்கைகளின் கஷ்டங்களைத் தொடர்ந்து பார்த்தே வந்துள்ளார்.
இதையடுத்து சிறுவனே முன்வந்து தனது தங்கைகளுக்காக எலும்பு மஜ்ஜை தானமாக வழங்குவதாகக் கூறினார். மேலும் இந்த சிகிச்சைக்காக இவர்களுக்கு நிதி திரட்ட ஆறு மாதங்கள் தேவைப்பட்டுள்ளது. பின்னர் இரண்டு சிறுமிகளுக்கும் எலும்பு மஜ்ஜை சிகிச்சை வெற்றி கரமாக முடிந்துள்ளது. தற்போது சிறுமிகள் இருவரும் நலமுடன் இருந்து வருகின்றனர்.
இது குறித்து பேசிய தந்தை அமித், “நான் கடனில் மூழ்கி இருந்தாலும், எங்கள் குடும்பத்தின் பொருளாதார எதிர்காலத்தைப் பற்றி கவலைப்பட்டாலும், இன்று நான் மிகவும் மகிழ்ச்சியான மனிதனாக இருக்கிறேன். என் மகள்கள் இப்போது அடிக்கடி நோய்வாய்ப்பட மாட்டார்கள் அல்லது மருத்துவமனைகளுக்குச் செல்ல மாட்டார்கள்” என மகிழ்ச்சியுடன் அமித் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் தலசீமியா நோயால் பாதிக்கப்படுவதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றனர்.
Also Read
-
புத்தக காதலர்களே தயாராகுங்கள் : ஜன. 8 ஆம் தேதி சென்னை புத்தகக் கண்காட்சியை தொடங்கி வைக்கும் முதலமைச்சர்!
-
சென்னை கடற்கரை பகுதிகளை பாதுகாக்க கடல்சார் உயரடுக்கு பாதுகாப்புப்படை : அதன் சிறப்புகள் என்ன?
-
பெயர் நீக்கம் மட்டுமே பிரச்சனை அல்ல: VBGRAMG சட்டத்தின் ஆபத்து குறித்து பழனிசாமிக்கு பாடம் எடுத்த முரசொலி
-
“SIR-க்கு பிறகு தமிழ்நாட்டில் 97,37,832 வாக்காளர்கள் நீக்கம்!” : தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் தகவல்!
-
வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இடம்பெறவில்லையா? : சென்னை மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!