Viral

பழக்கத்துக்கும் பயிற்சிக்கும் என்ன வித்தியாசம்?.. என்றாவது நீங்கள் யோசித்தது உண்டா?

பழக்கத்துக்கும் பயிற்சிக்கும் என்ன வித்தியாசம்?

இரண்டு விஷயங்களும் ஒன்று போல் தெரியக் கூடியவை. ஆனால் சற்று யோசித்துப் பார்த்தால் இரண்டுக்கும் உள்ள வித்தியாசங்கம் புரியும்.

பழக்கம் செயலுக்கானது.

பயிற்சி இலக்குக்கானது.

பல பழக்கங்கள் சேர்ந்துதான் பயிற்சி ஆகும்.

தூங்கப் போகும் முன் புத்தகம் படிப்பது ஒரு செயல். எல்லாருக்கும் வாய்க்காது. ஒவ்வொருவரின் சூழலுக்கேற்ப இருக்கும். ஆனால் அதன் நலன் கருதி பழக்கப்படுத்திக் கொள்ளலாம். யாரும் பிறந்ததில் இருந்து படித்து வரவில்லை. வாசிப்பு என்னும் செயலை பழக்கமாக்கிய பின் அது தொடரும்.

பயிற்சி ஒரு நீண்ட பயணத்தையும் அதன் முடிவில் ஒரு இலக்கையும் கொண்டது. ஓட்டம், நீச்சல் போன்றவைகளை சொல்லலாம். பயிற்சி என்பது ஒரு திட்டத்தை உள்ளடக்கியது. ஜிம் போவது பழக்கமெனில் ஆணழகன் பட்டத்துக்காக ஜிம் போவது பயிற்சி. பழக்கத்தை வேண்டாவெறுப்பாக கூட செய்யலாம். பயிற்சியை வேண்டி வெறியுடன் மட்டும்தான் செய்ய முடியும்.

இனி வேறு நிலைக்கு செல்வோம்.

சமூகரீதியாக பார்த்தால் பயிற்சி பல விதங்களில் உங்களுக்கு கொடுக்கப்படும். பல நிறுவனங்களின் வழி நீங்கள் பயிற்றுவிக்கப்படுவீர்கள். கல்வி, அரசு, குடும்பம் என பலவகைகளில் பயிற்சி பெறுவீர்கள். நீங்கள் அப்படி பயிற்றுவிக்கப்படுகிறீர்கள் என்பது தெரியாத அளவுக்கு பயிற்சி இருக்கும். Social Conditioning என்பார்கள். நீங்கள் பேசும், சிந்திக்கும் யாவுமே இப்படியான பயிற்சியால்தான். இதில் சோகம் என்னவென்றால் இப்படி நீங்கள் பயிற்றுவிக்கப்படுவது உங்களின் நல்லதுக்கே என சொல்லப்பட்டாலும் உண்மையில் நன்மை உங்களுக்கு கிடையாது. உங்களை பயிற்றுவிப்பவர்களுக்கே நன்மை பயக்கும்.

மேட்ரிக்ஸ் படம் பார்த்திருப்பீர்களே? அலுப்பு நிறைந்த அன்றாட வாழ்க்கையை நாயகன் வாழ்வான். உண்மை என்ன தெரியுமா? அப்படி அவனுக்கு சொல்லப்பட்டிருக்கும். யதார்த்தத்தில் அவனுக்குத் தெரியாத ஒரு பகுதியில் அவன் வாழ்ந்து கொண்டிருப்பான். ஏற்கனவே உருவாக்கப்பட்ட பிம்பங்கள் அவன் மூளைக்குள் தொடர்ந்து செலுத்தப்பட்டுக் கொண்டிருக்கும். அவற்றைதான் அவன் தன் உலகமென நம்பிக் கொண்டிருப்பான்.

பயிற்சி அப்படிப்பட்டதுதான்.

சமூகம் என்ற மேட்ரிக்ஸ்ஸுக்குள் உங்களை நீங்கள் செலுத்திக் கொள்வதற்கு கொடுக்கப்படுவதே பயிற்சி!

இந்த பயிற்சிகளின் உண்மையை புரிந்துகொண்ட பின்தான் பழக்கம் என்பதன் அருமை புரியும். இப்பயிற்சிகளின் கபட நோக்கங்களை புரிந்தபின், இவற்றில் இருந்து நம்மை நாமே விடுவித்துக்கொள்ள பழக்கப்படுத்துதலை தேர்ந்தெடுப்போம். வாசிப்பை பழக்கம் ஆக்குவோம். எழுத தொடங்குவோம். உரையாடுவோம். பயணிப்போம். இப்படி முன்னெப்பேதும் கொண்டிராத பழக்கங்களை உருவாக்கி கொள்வோம். Social conditioning முன்னிறுத்தும் பயிற்சிக்கு parallel-ஆக ஒரு social evolving-ஐ உருவாக்குவதற்கான தேவையாக இந்த பழக்கங்கள் இருக்கும்.

இப்படித்தான் பெரியார், இப்படித்தான் சே குவேரா இன்னும் பலர் எல்லாம். இவர்களின் வழி வருபவர்கள் பின்னர் இவர்களின் வழிகளும் பயிற்சிகளாக்கப்படும்.

Institutionalized பயிற்சிகள் மந்தைகளுக்கானவை.

Self learning பழக்கங்கள் கலகங்களுக்கானவை.

Also Read: காதல் என்பது ஓர் உணர்வு.. பசி, கோபம் போலதான் காதலும்!