வைரல்

காதல் என்பது ஓர் உணர்வு.. பசி, கோபம் போலதான் காதலும்!

காமம்தான் காதல் எனில் காமத்தை உடலிழந்த பின்னும் துணையை மனம் தேடுவது எதனால் என கேட்கலாம்.

காதல் என்பது ஓர் உணர்வு..  பசி, கோபம் போலதான் காதலும்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

காதல் என்பது ஓர் உணர்வு.. பசி, கோபம் போல!

எல்லா உணர்வுகளுக்கும் ஒரு காவிய நிலையும் கொடுத்து வைத்திருக்கிறோம். கோபத்தை வீரம் என்கிறோம். வன்முறையை போர் என்கிறோம். பற்றை பந்தம் என்கிறோம். போலவே காமத்தை காதல் என்கிறோம்.

ஆமாம். காதல் தொடங்குவது கலவி இணை தேடலில் இருந்துதான். கலவியில் பல வகை fantasyகள் இருப்பது போல், காதலிலும் பல fantasy தெரிவுகள் உள்ளன. மென்மையை சுகிக்க விரும்பி சுகிக்கிறோம். பின் முரட்டுதன்மையை சுகிக்க விரும்புகிறோம். பின் அவமதிப்பு. பின் ஒரே தள சிந்தனை. இன்னும் பற்பல.

காமம்தான் காதல் எனில் காமத்தை உடலிழந்த பின்னும் துணையை மனம் தேடுவது எதனால் என கேட்கலாம்.

இதில் ஒரு சூட்சுமம் இருக்கிறது.

காதல் என்பது ஓர் உணர்வு..  பசி, கோபம் போலதான் காதலும்!

மனிதனின் பரிணாமம் தனிமை கொண்டது. மனித உயிர், பிற எல்லா உயிர்களை போலவும் இனவிருத்தி பொருட்டு கலவி விருப்பமும் கொண்டது. ஆதி சமூகத்தில் கலவி விருப்பம் மிக இயல்பு. எந்தவித சமூக நிர்பந்தமும் இருக்கவில்லை. பிறகு உருவான உடைமை சமூகத்தில் சொத்துகளையும் சொத்துரிமைகளையும் காக்கும் பொருட்டு, தனி வாரிசும் குடும்ப அமைப்பும் உருவாக்கப்பட்டது.

நிற்க

சொத்தை பராமரிக்க வாரிசு தொடர்ச்சி தனி மனிதனுக்கும் அவன் வழி சொத்தை பராமரிக்க அரசுக்கும், குடும்பம் என்ற நிறுவனத்தை சட்டப்பூர்வமாக்க வேண்டிய அவசியம் எழுகிறது. சட்டப்பூர்வமாக்கவும்படுகிறது.

இவை ஏதுமின்றி தனி மனித உயிருக்கு கலவியே முதல் விருப்பம். அதனாலேயே ஈர்ப்பு எழுந்து துணை தேடுகிறது. பின் மேற்கூறிய சமூக நிறுவனங்களின் நிர்பந்தங்களாலும் மனித உயிரின் இயல்பான தனிமை தவிப்பாலும் மனிதன், காதல் என்ற பரிமாணத்தை உருவாக்கி அதன் மேல் தன் உயிர் தேவைகளையும் சமூகத் தேவைகளையும் சுமத்தி வைத்திருக்கிறான்.

ஆக, social condition-ம் natural condition-ம் சேர்த்து காதல் என்ற உணர்வை கட்டமைத்திருக்கிறது. சமூகம் மாறும் பட்சங்களில் காதல் இன்னும் வேறுவேறாகவும் மாறவும் செய்யும்.

காதல் என்பது ஓர் உணர்வு..  பசி, கோபம் போலதான் காதலும்!

குடும்பம் போல காதலுக்கு நேரடி சமூக மற்றும் சட்ட நிர்பந்தங்கள் கிடையாது. அதனால்தான் காதல் வழியாக சமூக மாற்றத்தை முயலுகிறோம்.

ஒருவருடன் பேசவோ, நேரம் கழிக்கவோ விருப்பம் தோன்றுகிறது எனில் அது என்ன விருப்பம் என இப்போது நீங்கள் ஆழ்ந்து யோசித்து பாருங்கள்.

காதலை எப்படி அடையாளப்படுத்துவதெனில், குறிப்பிட்ட நபர் மீது உடைமை மனநிலை (possessiveness) கொள்வீர்கள்.

நண்பருக்கும் காதலருக்கும் காமம்தான் வித்தியாசமா என கேட்டால், நீங்கள்தான் யோசிக்க வேண்டும். எதிர்பாலின நண்பரையே நண்பராக மட்டும்தான் பார்க்கிறீர்களா என கேட்டுக் கொள்ளுங்கள். ஏனெனில் ப்ராய்டு வேறு மாதிரி சொல்கிறார். மேலும் உறவுக்காக நண்பர் என்ற போக்கும் இருக்கிறது. அதனால் அவ்வளவு நிச்சயமாக சொல்லிட முடியாது. பொதுப்புத்தி புரிதலுடன் உங்கள் கேள்வி எனில், 'ஆம், காமமே வித்தியாசம்' என்பதே பதில்.

banner

Related Stories

Related Stories