Viral

இளசுகளின் கீதமாக உள்ள ‘கச்சா பாதாம்’ பாடலை பாடியது இவரா? வைரல் வீடியோவின் பின்னணி!

இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதளங்களிலும் ‘கச்சா பாதாம்’ பாடல் தொடர்பான வீடியோவை பார்க்காமல் இருப்போர் அரிதுதான். அந்த அளவுக்கு எல்லா சமூக வலைதளங்களிலும் அந்த பாடல் பட்டையக் கிளப்பி வருகிறது.

இதுவரைக்கும் இன்ஸ்டாகிராமில் மட்டும் கச்சா பாதாம் பாடலுக்கு 3 லட்சம் ரீல்ஸ்கள் போடப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், இந்த ட்ரெண்ட்டிங் பாடலை பாடியது யார் என்ற விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, கச்சா பாதாம் பாடலை உண்மையில் பாடியது மேற்கு வங்கத்தைச் சேர்ந்த வேர்க்கடலை விற்கும் வியாபாரியாவார்.

லக்‌ஷ்மிநாராயணபுர் பஞ்சாயத்தில் உள்ள குரல்ஜுரி கிராமத்தைச் சேர்ந்தவர்தான் பூபன் பாத்யகர். இவர் நாட்டுப்புற பாடலை பாடி மக்களின் கவனத்தை ஈர்த்து வேர்க்கடலை விற்று வருவதை வாடிக்கையாக கொண்டிருப்பவராவார்.

அந்த வகையிலேயே சில நாட்களுக்கு முன்பு கச்சா பாதாம் பாடலை தனக்கே உரிய பாணியில் பாடியிருக்கிறார் அந்த வியாபாரி. அப்போது இதனை பதிவு செய்த சிலர் யூடியூபில் பதிவேற்றம் செய்துள்ளனர். அந்த பாடலுக்கு வியூஸ்கள் குவியவே அதனை ராப் இசை கலைஞர்களான ரான் - இ மற்றும் பிரக்யா தத்தா ஆகிய இருவரும் இணைந்து ரீமிக்ஸ் செய்து கச்சா பாதாம் பாடலை வெளியிட்டனர்.

அப்படி ரீமிக்ஸ் செய்யப்பட்ட பாடலில் வேர்க்கடலை வியாபாரி பூபன் பாத்யகரையும் நடிக்க வைத்துள்ளனர். இந்த பாடல்தான் இணையத்தில் பட்டையக் கிளப்பி வருகிறது.

Also Read: ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ ஷூட்டிங்கை நிறுத்திய வடிவேலு; ரெடின் கிங்ஸ்லி செயலால் படக்குழு அதிருப்தி?