இந்தியா

தேர்வு முடியும் முன்பே வெளியான தேர்வுத்தாள் : ராஜஸ்தான் நீட் தேர்வில் நடைபெற்ற மாபெரும் மோசடி !

ராஜஸ்தான் மாநிலத்தில் நீட் தேர்வில் மற்றுமொரு ஒன்று நடைபெற்றுள்ளது.

தேர்வு முடியும் முன்பே வெளியான தேர்வுத்தாள் : ராஜஸ்தான் நீட் தேர்வில் நடைபெற்ற மாபெரும் மோசடி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம் என ஒன்றிய அரசு அறிவித்தது முதல், மருத்துவப் படிப்புக் கனவுகள் தகர்ந்துபோய்த் தவித்து வருகிறார்கள் கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏழை மாணவர்கள். மருத்துவம் படிக்க தகுதி இருந்தும், நீட் தேர்வால் தங்கள் கனவு நிறைவேறாமல் போனதால் கடந்த ஆண்டுகளில் தற்கொலை ஏராளமான செய்துகொண்டுள்ளனர்.

நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழகமே கொந்தளித்தபோதும், கண்டுகொள்ளாமல் தொடர்ந்து தேர்வை நடத்தி வருகிறது ஒன்றிய அரசு. தமிழ்நாட்டில் தொடங்கிய இந்த நீட் எதிர்ப்பு போராட்டம் தற்போது பல்வேறு இடங்களில் எதிரொலித்து வருகிறது. பல்வேறு தரப்பில் இருந்தும் நீட் தேர்வுக்கு எதிரான மனநிலை தற்போது அதிகரித்து வருகிறது.

அதுமட்டுமின்றி ஆள்மாறாட்டம், தேர்வு நாள் வெளியாவது என தொடர்ந்து நீட் தேர்வில் ஏராளமான முறைகேடுகளும் நடைபெற்றது வருகிறது.எனினும் ஒன்றிய அரசு நீட் தேர்வை தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் நீட் தேர்வில் மற்றுமொரு முறைகேடு ஒன்று நடைபெற்றுள்ளது.

தேர்வு முடியும் முன்பே வெளியான தேர்வுத்தாள் : ராஜஸ்தான் நீட் தேர்வில் நடைபெற்ற மாபெரும் மோசடி !

ராஜஸ்தான் மாநிலம் சவாய் மதோபூர் என்ற இடத்தில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தில் நடைபெற்ற நீட்தேர்வில் மாணவர்கள் தேர்வு முடியும் முன்னரே வினாத்தாளுடன் வெளியேறியுள்ளனர். அதனைத் தொடர்ந்து சுமார் 4 மணி அளவில் கேள்வித்தாள்கள் சமூக ஊடகங்களில் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.

இரண்டு மணிக்கு தொடங்கி 5.20 மணி வரை நீட் தேர்வுகள் நடைபெறும் நிலையில், மாணவர்கள் தேர்வு முடிவதற்கு ஒன்றரை மணி நேரம் முன்னதாகவே எப்படி வெளியேற அனுமதிக்கப்பட்டார்கள் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. மேலும் சிலருக்கு உதவுவதற்காக மாணவர்கள் கேள்வித்தாளுடன் வெளியேறி இருக்கலாம் என்று பல மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தேசிய தேர்வு முகமை கவனத்தில் கொண்டுள்ளதாக அறிக்கை ஒன்றை இன்றுவெளியிட்டுள்ளது. அதில் 120 மாணவர்கள் தேர்வு எழுதிய மையத்தில் சில மாணவர்கள் முன்கூட்டியே கேள்வித்தாளுடன் வெளியே சென்றதை தேசியத் தேர்வு முகமை உறுதி செய்துள்ளது.

banner

Related Stories

Related Stories