அரசியல்

மோடியின் பேச்சு இந்தியா கூட்டணி வெல்லும் என அவரின் அச்சத்தை வெளிப்படுத்துகிறது - திருமாவளவன் !

மோடியின் பேச்சு இந்தியா கூட்டணி வெல்லும் என அவரின் அச்சத்தை வெளிப்படுத்துகிறது - திருமாவளவன் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் நடைபெற்ற தேர்தலுலில்பதிவான வாக்குகள் கொண்ட மின்னணு வாக்கு இயந்திரங்கள் அரியலூரில் உள்ள கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தை பார்வையிடுவதற்காக விமானம் மூலம் திருமாவளவன் எம்.பி திருச்சிக்கு வருகை தந்தார்.

அங்கு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், " சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் நடைபெற்ற தேர்தலுக்கான மின்னணு வாக்கு பட்டியல் அரியலூர் வைக்கப்பட்டுள்ளது அதை பார்வையிடுவதற்காக இன்று செல்கிறேன். விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்கான மின்னணு வாக்கு எந்திரங்களை வைக்கப்பட்ட இடத்தில் சிசிடிவி கேமராக்கள் அரை மணி நேரம் செயலிழந்து உள்ளது.

இது குறித்து விசிக வேட்பாளர் ரவிக்குமார் தேர்தல் அலுவலரிடத்தில் புகார் மனு அளித்துள்ளார்.இதே போல நீலகிரி, ஈரோடு பகுதிகளில் சிசிடிவி கேமரா செயல் இழந்துள்ளது சந்தேகத்திற்கு இடமான சில குளறுபடிகள் நடந்துள்ளன. பிரதமர் மோடி அண்மை நாட்களாக பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருப்பதை காட்டுகிறது. அதை அவர் அவ்வப்போது வெளிப்படுத்துகிறார் அதற்கான சான்றுகள் அவரது உரைகள் அமைந்துள்ளது.

மோடியின் பேச்சு இந்தியா கூட்டணி வெல்லும் என அவரின் அச்சத்தை வெளிப்படுத்துகிறது - திருமாவளவன் !

அவருடைய நிலையை,பொறுப்பை மறந்து மிகவும் கீழிறங்கி போய் அவருடைய விமர்சனங்களை முன் வைக்கிறார். குறிப்பாக தாலியை பறித்து இஸ்லாமியருக்கு கொடுத்து விடுவார் என்ற அளவுக்கு அவர் பேசுவது அவரது பொறுப்புக்கு அழகல்ல .அது அவருடைய அச்சத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது.

தொடக்கத்தில் இருந்து தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் அதிர்ச்சி அளிக்கக்கூடும் வகையாக உள்ளது. இந்த பிரச்சனையில் யார் மீது குற்றம் சுமத்தப்படுகிறதோ அவருக்கு விளக்கம் கேட்டு அறிக்கை அனுப்ப வேண்டும். அப்படி பிரதமருக்கு அனுப்ப வேண்டிய தேர்தல் ஆணையம் அதற்கு மாறாக பாஜக தலைவர் நட்டாவுக்கு அவர்களுக்கு அனுப்பியது ஏன் என்பது புரியவில்லை. தேர்தல் ஆணையத்தின் இந்த அணுகுமுறை ஒரு சார்பாக இருக்கிறது ஆளும் கட்சிக்கு சாதகமான அணுகுமுறையாக இருக்கிறது. பிரதமரை விளக்கம் கேட்பதற்கு கூட தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது என்பதை உறுதிப்படுத்துகிறது

banner

Related Stories

Related Stories