சினிமா

‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ ஷூட்டிங்கை நிறுத்திய வடிவேலு; ரெடின் கிங்ஸ்லி செயலால் படக்குழு அதிருப்தி?

வடிவேலுவிற்கும் மற்றொரு நகைச்சுவை நடிகரான ரெடின் கிங்ஸ்லிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ ஷூட்டிங்கை நிறுத்திய வடிவேலு; ரெடின் கிங்ஸ்லி செயலால் படக்குழு அதிருப்தி?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிகர் வடிவேலுவின் கம்பேக் படமாக உருவாகிவருகிறது ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’. சுராஜ் இயக்கத்தில் லைகா புரோடக்‌ஷன் தயாரிப்பில் உருவாகிவரும் இந்த படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக ஷிவானி நாராயணன் நடிப்பதாக சொல்லப்படுகிறது.

தவிர இவர்களுடன் சிவாங்கி, ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், விக்னேஷ்காந்த், லொள்ளு சபா சேஷு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் வடிவேலுவிற்கும் மற்றொரு நகைச்சுவை நடிகரான ரெடின் கிங்ஸ்லிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

சென்னையில் நேற்று நடந்த படப்பிடிப்பிற்கு கிங்ஸ்லி 2 மணி நேரம் தாமதாக வந்ததால் வடிவேலு 2 மணி நேரம் காத்திருந்ததாக கூறப்படுகிறது, இதனால் கடுப்பான வடிவேலு அன்று ஷூட்டிங்கை கேன்சல் செய்துவிட்டு கிளம்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதை தொடர்ந்து நாளை படப்பிடிப்பு துவங்கும் என DT நெக்ஸ்ட் இதழ் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், படப்பிடிப்பிற்கு தான் நேரத்திற்கு வருவதை போலவே மற்ற கலைஞர்கள் உள்ளிட்டோரும் நேரம் தவறாமல் வர வேண்டும் என எதிர்ப்பார்ப்பதை வழக்கமாக கொண்டிருப்பவர் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories