Tamilnadu
“கொள்கைத் தடமும் தொண்டறமும் என்றும் நமக்கு வழிகாட்டும்” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
கழகத்தின் மூத்த முன்னோடி சோ.மா.இராமச்சந்திரன் மறைவுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு:-
நூறாண்டுகளைக் கடந்து வாழ்ந்த கழகத்தின் மூத்த முன்னோடியும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சோ.மா.இராமச்சந்திரன் அவர்கள் மறைவெய்திய செய்தி மிகுந்த துயரமளிக்கிறது.
எளிய தேநீர்க் கடை நடத்தி, தமது கடின உழைப்பால் உயர்ந்து, திராவிட இயக்கக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, கழகத்தில் இணைந்தவர். மிசா சிறைவாசம் கண்டவர். 30 ஆண்டுகள் பகுதிச் செயலாளராகவும், ஒருமுறை அண்ணா நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் மக்கள் பணியாற்றியவர்.
பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், இனமானப் பேராசிரியர் ஆகியோரின் அன்பையும் நன்மதிப்பையும் பெற்றவர். கொள்கையில் உறுதியையும் களப்பணியில் அர்ப்பணிப்பையும் தமது நூற்றாண்டு வாழ்வால் எடுத்துக்காட்டியவர். அவரது நெடிய கழகப் பணியைப் போற்றும் வகையில், கடந்த ஆண்டு நடைபெற்ற கழக முப்பெரும் விழாவில் அவருக்குக் கலைஞர் விருது வழங்கிச் சிறப்பித்தோம்.
கடந்த ஆண்டு அவரது இல்லத்திற்கே நேரில் சென்று, நூறாவது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தபோது அவர் காட்டிய அன்பும் மகிழ்ச்சியும் இன்றும் என் நெஞ்சில் நிறைந்திருக்கின்றன.
கழகத்தின் வரலாற்றோடு பின்னிப் பிணைந்த அவரது நெடிய பொதுவாழ்வு இன்று நிறைவுற்றிருக்கிறது. அவர் விட்டுச் சென்ற கொள்கைத் தடமும் தொண்டறமும் என்றும் நமக்கு வழிகாட்டும்!
சோ.மா.இராமச்சந்திரன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், கழக உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
Also Read
-
கைது செய்ய வந்த கேரள போலீஸ்: நெஞ்சு வலி என்று நாடகமாடிய BLM பிரேம்குமார் - நடந்தது என்ன?
-
CBSE-க்கு முன்னுரிமை... நீட் தேர்வே ஒரு பெரிய மோசடி : அதிகாரப்பூர்வமாக வெளியான பகீர் தகவல்!
-
“படித்தவர்களின் வாக்குகளால் தோற்றோம்!” : உ.பி. பா.ஜ.க அமைச்சர் ஓம் பிரகாஷ் பேச்சு!
-
தி.மு.க.வில் இணைந்த அ.தி.மு.க நிர்வாகிகள்! : முழு விவரம் உள்ளே!
-
மோசடிப் பேர்வழியுடன் 'டம்மி' முதலமைச்சர் விஜய்க்கு என்ன ரகசியக் கூட்டணி? : DMK IT Wing கேள்வி!