Tamilnadu
“ஆளுநருக்கு இணக்கமாக செயல்படும் த.வெ.க அரசு : பேரவையில் சிவசங்கர் எம்.எல்.ஏ குற்றச்சாட்டு!
தமிழ்நாட்டு சட்டப்பேரவை கூட்டம் நேற்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இந்நிலையில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் தி.மு.க எம்.எல்.ஏ சிவசங்கர் உரையாற்றினார்.
அப்போது சிவசங்கர் பேசுகையில்,”மாநில உரிமைக்காகத் தொடர்ந்து குரல் கொடுக்கிறோம். மேலும், தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும், தேசிய கீதம் இறுதியாகப் பாடப்பட வேண்டும் என்ற மரபு இருக்கிறது. ஆனால், பேரவையில் ஆளுநர் உரையின்போது இரண்டு முறை தேசிய கீதம் பாடியதை ஆளுநர் சுட்டிக்காட்டுகிறார். அப்படியென்றால், அதற்கு இணக்கமாகச் சபாநாயகர் இருக்கிறாரா? நாங்கள் இதற்கு முன்பாகச் சொன்னதுதான் நிகழ்கிறதா?
வட மாநிலங்களில் எளிதாகப் பிறிதொரு மொழியை ஏற்றுக்கொண்டதால்தான் தாய்மொழியை இழந்து இருக்கிறார்கள். அப்படித்தான் இதையும் விட்டுவிடக் கூடாது என்று இந்தக் கருத்தைப் பதிவு செய்கிறோம் .
ஆளுநர் உரையில் நீங்கள் பேசியதற்கெல்லாம் விளக்கம் கொடுத்தால் நீங்கள் பேசியது ஒன்றுமில்லாமல் ஆகிவிடும். இந்த ஆளுநர் உரை என்பது உங்களுக்கும் ஒன்றிய அரசுக்கும் இணக்கம் ஏற்பட்டிருக்கிறது என்பதைத்தான் காட்டுகிறது. அவை முன்னவர் செங்கோட்டையன் ஆளுநர் உரை பற்றிப் பேசக் கூடாது என்கிறார்; ஏன், ஆளுநர் பற்றி எதுவும் அவைக்குறிப்பில் இடம்பெறக் கூடாதா?
எந்த மக்கள் வாக்களித்து வெற்றி பெற வைத்ததாக நீங்கள் சொன்னீர்களோ, அவர்களே தற்போது போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். எங்களுக்கு வாக்களித்த மக்களின் குரலாக நாங்கள் இந்தப் பேரவையில் இருக்கிறோம். ஆளுநர் உரை உங்களுக்கு உவப்பானதாக இருக்கலாம்; தமிழ்நாடு மக்களுக்கு உவப்பானது அல்ல. ஆக்கப்பூர்வமான ஆட்சி தருவதற்கு என்ன பணியோ அதைப் பாருங்கள்.” என பேசினார்.
Also Read
-
ஜனவரிக்குள் 1 கிலோ அரிசி விலை ரூ.120-ஆக உயரும் அபாயம்! - த.வெ.க.வின் தோல்வியால் தவிக்கும் மக்கள்!
-
த.வெ.க எம்.எல்.ஏ. சரவணன் மீது பணமோசடி புகார் : “இதுதான் தூய ஆட்சியின் லட்சணமா?” - கனிமொழி எம்.பி. சாடல்!
-
“பாலுக்கு காவல், பூனைக்கு தோழனா?” : விஜய்யின் Double Action-க்கு தயாநிதி மாறன் கண்டனம்!
-
தேசிய விருதுகள் முதல் பத்ம ஸ்ரீ விருதுகள் வரை.. காலா பட நடிகர் நானா படேகர் காலமானார்!
-
குடிநீர் தொட்டியில் மலம்.. மூடி மறைத்த அரசுப் பள்ளி நிர்வாகம்.. 2 நாட்களாக அவலம்!