Tamilnadu
முதலமைச்சர் தொகுதியிலேயே... : பள்ளிக்குச் சென்ற சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்!
தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான த.வெ.க ஆட்சி அமைந்ததில் இருந்து பெண்கள் மீதான வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இன்று முதலமைச்சர் விஜய் தொகுயிலேயே பள்ளிக்கு சென்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை நடந்த சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
சென்னை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் முகேஷ் என்ற இளைஞர இன்று காலை பெரம்பூர் பள்ளிச் சாலையில் இவர் நின்று கொண்டிருந்தபோது, அவ்வழியாகப் பள்ளிக்கு நடந்து சென்ற சிறுமி ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதைப் பார்த்த அங்கிருந்த பொதுமக்கள், அந்த வாலிபரைப் பிடித்துத் தர்மஅடி கொடுத்துப் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.போலீசார் அவரைக் கைது செய்து, செம்பியன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பள்ளிக்குச் சென்ற சிறுமியிடம் வாலிபர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் பெரம்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், தமிழக அரசு அறிவித்துள்ள 'சிங்கப்பெண்கள்' எங்கே சென்றார்கள் என்று தெரியவில்லை என்றும், சென்னையில் பள்ளிக்குச் செல்லும் மாணவிகளுக்குப் பாதுகாப்பில்லாத சூழ்நிலை நிலவி வருவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
Also Read
-
“ஒன்னு மின்வெட்டு, இரண்டு அரிவாள் வெட்டு.. இதான் தவெக ஆட்சி” : முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“வேங்கைவயல் விவகாரத்தில் நீலிக்கண்ணீர்... மன்னிப்புக் கேட்க தயாரா?” : வன்னி அரசுக்கு கோவி.செழியன் கேள்வி!
-
“24 மணி நேரத்தில் 8 கொலைகள்.. தினமும் எகிறும் Crime Rate” : தவெக அரசுக்கு கனிமொழி எம்.பி கடும் கண்டனம்!
-
எழுச்சியுடன் நடந்த திமுக முப்பெரும் விழா.. விருதுகளை வழங்கி சிறப்பித்த கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
Dummy முதலமைச்சரின் ஆட்சியில் காற்றில் பறக்கும் சட்டம் - ஒழுங்கு : எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி சாடல்!