Tamilnadu
த.வெ.க ஆட்சியில் த.வெ.க.வைச் சேர்ந்த பெண்ணிற்கே பாதுகாப்பு இல்லை! - வெளியான திடுக்கிடும் தகவல்!
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருவைகுண்டம் பகுதியில் இளம் பெண்ணிற்கு வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி, அவருக்கு மயக்க மருந்து கலந்துகொடுத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த த.வெ.க தூத்துக்குடி மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பாலமுருகன் மற்றும் அவரது நண்பர் ஜெயபால் அகிய இரு த.வெ.க உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான த.வெ.க, ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் மாநில அளவில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை மற்றும் அதிகார அத்துமீறல் ஆகியவை தலைதூக்கி வருகின்றன.
இவை மக்களுக்கு அச்சுறுத்தல் தரும் வகையில் அமைந்துள்ளது என எதிர்க்கட்சியினர் கண்டனங்களை முன்வைக்கும் போது, அதற்கு பொறுப்பேற்று பதிலளிக்காமல் அலட்சியமாக “எல்லாத்தையும் நீங்கள் செய்துவிட்டு, என் மீது ஏன் பழிப்போடுகிறீர்கள்” என அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் விஜய் பதிலளிப்பது மிகுந்த ஏமாற்றத்தை தரும் வகையில் அமைந்துள்ளது.
குறிப்பாக, விஜய் தலைமையிலான த.வெ.க ஆட்சியில் தமிழ்நாட்டின் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதுபோல, அவரது தலைமையிலான கட்சியின் உள்ளும் ஒழுங்கமற்ற செயல்பாடுகள் நீடித்து வருகின்றன. அதற்கு எடுத்துக்காட்டாகதான், திருவைகுண்டம் கூட்டுப் பாலியல் வன்கொடுமை இடம்பெற்றிருக்கிறது.
த.வெ.க தூத்துக்குடி மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பாலமுருகன் மற்றும் அவரது நண்பர் ஜெயபால் ஆகிய இருவரும் திருவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த த.வெ.க பெண் நிர்வாகி ஒருவரிடம் பணம் பெற்றுள்ளனர்.
நீண்ட நாட்களாக பணத்தைத் திருப்பி தராமல் இழுத்தடித்துள்ளனர். அந்த இளம்பெண் பணத்தை உடனடியாக திருப்பித் தரும்படி கட்டயப்படுத்தியதையடுத்து, பணத்திற்கு பதிலாக வேலை வாங்கித் தருவதாக கூறி அந்த பெண்ணை ராமநாதபுரம் அழைத்துச் சென்று, ஏர்வாடி பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்க வைத்து குளிர்பானத்தில் மயக்க மருந்துக் கொடுத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண் இந்த சம்பவம் தொடர்பாக திருவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, புகாரின் பேரில் பாலமுருகன் மற்றும் ஜெயபால் ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து, அவர்களை அனைத்து மகளிர் காவல்நிலைய காவல்துறையினர் பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.
இதனையடுத்து, இக்கொடூர சம்பவம் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Also Read
-
தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் - தி.மு.க. சார்பில் களம் இறங்கும் சேது : மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!
-
“இதுபோன்ற ‘உடல்மொழிகள்’ கண்ணியமான அணுகுமுறை இல்லை!” : முதல்வருக்கு வி.சி.க தலைவர் திருமாவளவன் கண்டனம்!
-
“சட்டமன்ற உரிமை என்பது அரசியல் பழிவாங்கலுக்கான ஆயுதமல்ல!” : தி.மு.க கொறடா எ.வ.வேலு கண்டனம்!
-
தனியார் பல்கலை. திருத்த மசோதா நிறைவேற்றம்.. சமூகநீதியை சீர்குலைக்கும் தவெக அரசு - கோவி. செழியன் கண்டனம்!
-
அருவெறுப்பான உரை... : முதலமைச்சர் விஜய் பேச்சை கண்டித்து ஆர்ப்பாட்டம் அறிவித்த தி.மு.க!