தமிழ்நாடு

இரண்டரை மாதத்தில் ரூ.20 ஆயிரம் கோடி கடன்.. - முதல்வர் விஜயை விளாசிய முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன்!

இரண்டரை மாதங்களில் ரூ.20 ஆயிரம் கோடி கடன் தவெக அரசு வாங்கியுள்ளதாக முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் விமர்சித்துள்ளார்.

இரண்டரை மாதத்தில் ரூ.20 ஆயிரம் கோடி கடன்.. - முதல்வர் விஜயை விளாசிய முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள தனியார் விடுதியில் திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு கட்சி நடவடிக்கைகள் குறித்தும், உள்ளாட்சி தேர்தல் வந்தால் அதனை எதிர்கொள்வது குறித்தும் ஆலோசனைகள் வழங்கினார்.

இதைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் செய்தியாளர்களிடம் பேசியது வருமாறு :-

தேர்தல் பிரச்சாரத்திலும் சரி, ஆட்சிக்கு வந்த பிறகும் சரி, திமுக தான் மக்கள் தலையில் கடன்சுமையை ஏற்றி விட்டதாக இல்லாததையும் பொல்லாததையும் பேசினார் முதல்வர் விஜய். ஆனால் இப்போது வெறும் இரண்டரை மாதங்களில் ரூ.20 ஆயிரம் கோடி வரை கடன் வாங்கியுள்ளது தவெக அரசு. இது முதல்வர் விஜய்க்கு தெரியுமா? பிரச்சாரம் செய்து மக்களை ஏமாற்றினார்கள் என்பது இன்றைக்கு வெட்ட வெளிச்சமாக தெரிகிறது.

இரண்டரை மாதத்தில் ரூ.20 ஆயிரம் கோடி கடன்.. - முதல்வர் விஜயை விளாசிய முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன்!

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தற்கொ* செய்துள்ளனர். லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நிறைய பேர் மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளனர். இதன் காரணமாக நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக மாணவர்கள் தன்னெழுச்சியாக போராட்டம் நடத்தினர். ஆனால் தமிழ்நாட்டில் ஆளும் கட்சியான த.வெ.க அமைச்சர்கள் மற்றும் த.வெ.க-வினர் அனைவரும் திரையரங்கில் படம் பார்த்து, அழுது ரீல்ஸ் போட்டுக்கொண்டு இருந்தார்கள்.

தலைநகர் டெல்லியில் ஜனநாயகத்தை காப்பாற்ற பெரும் போராட்டம் நடந்த அதே வேளையில், தமிழ்நாட்டில் ஜனநாயகன் படத்தை பார்ப்பதற்கு டிக்கெட் வாங்கி கொடுத்து, விளம்பரப்படுத்தி, போஸ்டர் ஒட்டப்பட்டுக்கொண்டிருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு அமைச்சர் சொல்கிறார் எல்லோரும் படம் பாருங்கள் என்று. இந்த கலாச்சார சீரழிவுதான் மாற்றமா? சினிமா பார்ப்பதற்கு தான் முக்கியத்துவம் கொடுக்கிறீர்களா?

இரண்டரை மாதத்தில் ரூ.20 ஆயிரம் கோடி கடன்.. - முதல்வர் விஜயை விளாசிய முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன்!

சென்னையிலும் பல்வேறு மாவட்டங்களிலும் போராட்டங்கள் நடந்தன. எனினும் அமைச்சர்கள் திரையரங்கில் இருந்து திரைப்படம் பார்த்து அழுது கொண்டிருந்தனர். எல்லா அமைச்சர்களும் அழுதார்கள். உண்மையில் அழுதார்களா அல்லது ரீல்ஸ்-க்காக அழுதார்களா என்று தெரியவில்லை. ஆனால் ஒருவேளை முதல்வரை இம்ப்ரஸ் செய்வதற்காக தான் அவர்கள் ரீல்ஸ் வெளியிட்டார்கள் என்பதுதான் உண்மை.

சரியான விலைக்குத்தான் சினிமா டிக்கெட் விற்கப்படும் என்று சொன்னார்கள். ஆனால் டிக்கெட் விலையை விட ஐந்து மடங்கு விற்பனை செய்து வருகின்றனர். 100 ரூபாய் டிக்கெட்டை 500 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகின்றனர். அந்த அளவுக்கு டிக்கெட் கூட விலையேற்றி தான் விற்பனை செய்யப்படுகிறது.

இரண்டரை மாதத்தில் ரூ.20 ஆயிரம் கோடி கடன்.. - முதல்வர் விஜயை விளாசிய முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன்!

முதல்வர் விஜய் சொன்னதை எதுவும் செய்யவில்லை. எல்லாமே நேருக்கு மாறாக தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. குறிப்பாக தமிழ்த்தாய் வாழ்த்து குறித்து, "முதலில் தேசிய கீதம் பாடுவோம், வந்தே மாதரம் பாடல் பாடுவோம் மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவோம்" என்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. துணைவேந்தர் பேட்டி கொடுக்கிறார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சியில் இது போன்று ஒரு துணை வேந்தரால் பேட்டி கொடுக்க முடியுமா?

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடிய மனோன்மணியம் சுந்தரனார் பெயரில் உள்ள பல்கலைக்கழகத்திலேயே இந்த நிலைமை. துணைவேந்தர் அவ்வாறு அறிவிக்கிறார் என்றால், நம்முடைய தமிழ் மொழியை காக்க இந்த அரசு என்ன செய்யப் போகிறது? என்ற கேள்வி எழுகிறது.

சட்டமன்றத்தில் கூட தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படும், இறுதியாக தேசிய கீதம் பாடப்படும். தமிழ் மொழிக்குரிய மரியாதை, மதிப்பினை இந்த அரசு கொடுக்கவில்லை . கொடுக்க மறுக்கிறார்கள். அதனைக் கண்டும் காணமால் இருக்கிறார்கள் என்பது எங்களுடைய குற்றச்சாட்டு." என்றார்.

banner

Related Stories

Related Stories