Tamilnadu
“திமுக அரசின் மசோதாவுக்கு கிடைக்கும் ஒப்புதல் தான் நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்” : உதயநிதி !
ராஜஸ்தான் உள்ளிட்ட சில மாநிலங்களில் நீட் தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததாக எழுந்த புகார்களை தொடர்ந்து,மே 3-ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை இன்று ரத்து செய்துள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு அரசும், அனைத்துக் கட்சிகளும் நீட் தேர்வுக்கு எதிரான குரலை ஓங்கி ஒலித்திட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவு வருமாறு:-
நீட் தேர்வு என்பதே ஒரு மோசடி என்று தொடக்கம் முதலே திராவிட முன்னேற்றக் கழகம் சொல்லி வருவது மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது.
நீட் குளறுபடிகள் ஆண்டுதோறும் தொடர்கதையாகி விட்டன.
இப்போது, ராஜஸ்தானில் நீட் கேள்வி தாள் முன்கூட்டியே வெளியானது தெரிந்ததால் இந்த ஆண்டுக்கான தேர்வையே ஒன்றிய அரசு ரத்து செய்துள்ளது.
ஏழை-எளிய பின்னணியில் இருந்து வரும் மாணவர்களின் கனவுகளை சிதைத்துக் கொண்டிருக்கும் நீட் தேர்வு, நமக்கு வேண்டவே வேண்டாம் என்று தி.மு.கழக அரசால் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் தர மறுக்கிறார்.
அந்த மசோதாவுக்கு கிடைக்கும் ஒப்புதல் தான் தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தைக் காப்பாற்றும் - நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்!
தமிழ்நாடு அரசும், அனைத்துக் கட்சிகளும் நீட் தேர்வுக்கு எதிரான குரலை ஓங்கி ஒலித்திட வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“மத ரீதியான நிகழ்ச்சி நடத்தியது மதச்சார்பின்மைக்கு விரோதமானது” : த.வெ.க அரசுக்கு CPM எதிர்ப்பு!
-
“1985 வரலாற நடக்க வச்சுடாதீங்க...” விஜய்யை எச்சரிக்கும் மீனவர்கள்.. MGR ஆட்சியில் 1985-ல் நடந்தது என்ன?
-
‘டோரதி’ – திருநங்கைகளின் வாழ்வியலைப் பேசும் துணிச்சலான முயற்சி!
-
“தமிழ்நாட்டில் விலையும், கொலையும்தான் உயர்கிறது” : த.வெ.க அரசு மீது கனிமொழி எம்.பி தாக்கு!
-
“பா.ஜ.க பாதையில் செல்லும் த.வெ.க. அரசு ; தமிழ்நாட்டை மதவெறி மண்ணாக்க அனுமதியோம்” : கி.வீரமணி ஆவேசம்!