தமிழ்நாடு

MLA தொடங்கி அரசு ஆலோசகர் வரை.. ஜோதிடத்துக்கு முக்கியத்துவம்.. மூட நம்பிக்கைக்கு செவிசாய்க்கும் விஜய்!

ஜோதிடத்துக்கு விஜய் முக்கியத்துவம் அளிக்கும் சம்பவம் தமிழ்நாடு மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

MLA தொடங்கி அரசு ஆலோசகர் வரை.. ஜோதிடத்துக்கு முக்கியத்துவம்.. மூட நம்பிக்கைக்கு செவிசாய்க்கும் விஜய்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

நாட்டுக்கே முன்மாதிரியாக விளங்குவதில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கிறது. இதற்கு காரணம் தமிழ்நாட்டின் வளர்ச்சியும், சமூக நீதியும், பகுத்தறிவுமே. இப்படியான சூழலில் திமுக கூட்டணி ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ள விஜய், மக்கள் நம்பிக்கைக்கு அல்லாமல் மூட நம்பிக்கைக்கு முக்கியத்துவம் அளித்துள்ளது மதச்சார்பின்மையை கேள்விக்குறியாக்கியுள்ளது.

தேர்தல் பிரச்சாரம் முடிந்த கையோடு, ஒவ்வொரு கோயிலாக போய் வழிபாடு செய்தார் விஜய். கடவுள் நம்பிக்கை உள்ளவராக இருக்கும் விஜய், அந்த நம்பிக்கையோடு சேர்ந்து, தற்போது மூட நம்பிக்கைக்கும் முக்கியத்துவம் அளித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, விஜய் அரசியல் வரும் முன்னரே பிரபலமாக அறியப்பட்ட ஜோதிடர் ரத்தன் பண்டிட் வெற்றிவேல், அவரது குடும்ப ஜோதிடராக இருந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழலில் அவர் அரசியல் வந்த பின்பு, ஒவ்வொரு நகர்வையும் அவரை கேட்டு தான் முடிவு செய்வதாக சமூக வலைதள வட்டாரங்கள் மூலம் அறியப்படுகிறது.

MLA தொடங்கி அரசு ஆலோசகர் வரை.. ஜோதிடத்துக்கு முக்கியத்துவம்.. மூட நம்பிக்கைக்கு செவிசாய்க்கும் விஜய்!

குறிப்பாக அவர் பிரச்சாரம் செய்யும் நேரம், இடம் தேர்வு செய்வது மட்டுமின்றி, அவர் தேர்தல் பிரச்சாரம் முடிந்த பிறகு எந்த கோயில் செல்ல வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியதாகவும், விஜய் அவரது பேச்சையே கேட்பதாகவும் பல தகவல்கள் இணையத்தில் வைரலானது.

இந்த சூழலில் விஜயின் தனிப்பட்ட ஜோதிடரை, அரசு ஆலோசகராக நியமித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மதச்சார்பற்ற நாடு என்று சொல்வதற்கு ஏற்ப, தமிழ்நாடு உதாரணமாக இருந்து வருகிறது. இங்கே பாஜக, ஆர்.எஸ்.எஸ். மதம் சார்ந்த மோதல்களை ஏற்படுத்த முயன்றபோதெல்லாம், திமுக அதனை தடுத்தது.

இப்படியான சூழலில் விஜய்க்கு ஜோதிடம் பார்க்கும் ஜோதிடரை, அரசு ஆலோசகராக நியமித்துள்ளது பலர் மத்தியிலும் கண்டனங்களை எழுப்பி வருகிறது.

MLA தொடங்கி அரசு ஆலோசகர் வரை.. ஜோதிடத்துக்கு முக்கியத்துவம்.. மூட நம்பிக்கைக்கு செவிசாய்க்கும் விஜய்!

ஏற்கனவே தனது கட்சியின் கவுண்டம்பாளையம் தொகுதி வேட்பாளராக ஜோதிடர் கனிமொழி சந்தோஷ் அறிவிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஏனெனில், கனிமொழி சந்தோஷ், கேன்சர் நோயை கூட ஜோதிடத்தின் மூலம் சரி செய்து விட முடியும் என்று அறிவியல் அறிவுக்கும் அப்பாற்பட்டு பேசினார். தொடர்ந்து அதற்கு கண்டனங்கள் வலுத்தபோதும், TVK தனது வேட்பாளரை மாற்றாமல் இருந்தது. எனினும் தற்போது அவர் விஜய் கட்சியின் MLA -வாக உள்ளார்.

இந்த தொடர் நிகழ்வுகளால் விஜயின் மதச்சார்பின்மை மொத்தமாக கேள்விக்குள்ளாகியுள்ளது. அதோடு மக்களை நம்பாமல், மூட நம்பிக்கையை அதுவும் ஒரு முதலமைச்சர் நம்புவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories