Tamilnadu
ஒன்றிய அமைச்சர்களும் பாஜக முதலமைச்சர்களும் பதில் சொல்வார்களா? : முதலமைச்சர் எழுப்பும் கேள்விகள்!
தமிழ்நாட்டின் அரசியல் தேர்தல் களம் சூடுபடித்துள்ளது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 16 நாட்களே இருக்கும் நிலையில் வேட்பாளர்கள் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் எப்படியாவது கால்பதித்து விட வேண்டும் என பா.ஜ.க ஒவ்வொரு தேர்தலிலும் பல்வேறு திட்டங்களை தீட்டி முயற்சித்து வருகிறது. ஆனால் தமிழ்நாட்டு மக்கள் மதவாத சக்திகளுக்கு இங்கு இடமில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.
இந்த தேர்தலில் கூட 6 மாநில முதலமைச்சர்களை தமிழ்நாட்டிற்கு பரப்புரைக்காக அனுப்புகிறது பா.ஜ.க. அதில் உத்தர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஒருவர்.
இந்நிலையில் தமிழ்நாட்டுக்கு வரும் ஒன்றிய பா.ஜ.க. அமைச்சர்களும் & பா.ஜ.க. முதலமைச்சர்களும் இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்வார்களா? என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சில கேள்விகளை எழுப்பியுள்ளார்.
சமூகவலைதளத்தில் கேள்விகளை எழுப்பியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,"தமிழ்மண்ணில் நின்று, "மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவோம்" என்று சொல்லி பரப்புரை செய்யத் தயாரா?
நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாட்டுக்குத் தருவது எவ்வளவு? பா.ஜ.க.வால் ஆளப்படும் செல்லக்குழந்தை மாநிலங்களுக்குத் தருவது எவ்வளவு? வெளிப்படையாக அறிவிக்கத் தயாரா?
கிறிஸ்தவத் தொண்டு நிறுவனங்கள் மீது தாக்குதல் தொடுக்கும் FCRA சட்டத்திருத்தத்தை முழுமையாகத் திரும்பப் பெறுவீர்களா அல்லது அடுத்த வாரமே நிறைவேற்றப் போகிறீர்களா?
இவற்றுக்கெல்லாம், பழனிசாமி அவர்களால் தனது டெல்லி ஓனர்களிடம் பதில்பெற்றுத் தர முடியுமா?
கண்ணியமற்ற அவதூறுகளை வாந்தி எடுப்பதை விடுத்து, மக்களின் வாழ்வுரிமைப் பிரச்சினைகளை எப்போதுதான் பேசுவீர்கள்?
தமிழ்நாட்டைத் துண்டாட எத்தனை பேர் டெல்லியில் இருந்து படையெடுத்து வந்தாலும், தமிழ்நாடு தலைகுனியாது” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“விவசாயிகளுக்கு நிதி இல்லை; ஆனால், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு கார்!” : தஞ்சையில் உதயநிதி கண்டனம்!
-
த.வெ.க ஆட்சியில் சட்டமன்றமே ‘ரீல்’சிற்காகத்தான் நடத்தப்படுகிறது! : கனிமொழி எம்.பி விமர்சனம்!
-
டெஸ்ட் போட்டியில் வரலாறு படைத்த வங்கதேசம்.. ஸ்டார்க்கின் அதிரடி.. Come Back கொடுத்த ஆஸ்திரேலியா!
-
தமிழ்நாட்டிற்கான ரூ.2,087 கோடி நிதியை நிலுவையில் வைத்திருக்கும் பாஜக அரசு! : RTI மூலம் வெளியான உண்மை!
-
அருப்புக்கோட்டையில் அரசு அலுவலகங்களை ஆட்டிப்படைக்கும் த.வெ.க.வினர்! : கடும் அதிருப்தியில் மக்கள்!