Tamilnadu
13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை : இந்து மகா சபை அமைப்பின் தலைவர் கைது!
வேலூரை சேர்ந்த பெண் ஒருவர் தனது மகன் மற்றும் மகளுடன் வசித்து வருகிறார். இவர் முதல் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில், அப்பெண்ணின் முதல் கணவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால், அவரை கவனித்து கொள்ள 13 வயது மகளை உறவினர் ஒருவர் சென்னைக்கு அழைத்து வந்துள்ளார். பின்னர் சிறுமி கோடம்பாக்கத்தில் தங்கி அவரை கவனித்துக் கொண்டு பள்ளிக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து சிறுமியின் தந்தை வழி உறவினர் ஒருவர், நான் சொன்னபடி செய்தால் வாழ்க்கையில் நீ நன்றாக இருக்கலாம் என ஆசையை தூண்டியுள்ளார். மேலும் நான் சொல்லும் நபர்களுடன் நீ தனியாக இருக்க வேண்டும். நான் சொன்னபடி நீ நடந்து கொள்ளவில்லை என்றால் உனது குடும்பத்தை கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.
இதனால் சிறுமி அவர் சொன்னபடி நடந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமியின் பாட்டி இறந்த நிலையில் அவரது துக்க நிகழ்வில் கலந்து கொள்ள சிறுமி சென்ற போது உறவுக்கார பெண் ஒருவர் சிறுமியிடம் சொத்தில் பங்கு கேட்டு வந்தாயா? என தகராறு செய்துள்ளார்.
மேலும்,உன்னுடைய அந்தரங்க வீடியோவை சமூக வலைத்தளங்களில் பரப்பி விடுவேன் என மிரட்டி உள்ளார். இதனால் பயந்து போன சிறுமி இது குறித்து தன் தாயிடம் கூறியுள்ளார். பின்னர் சிறுமியின் தாய் இது குறித்து மாம்பலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் . புகாரின் பேரில் போலீசார் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் விசாரணை நடத்தி சிறுமியின் உறவுக்கார பெண் மற்றும் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த இந்து மகா சபா அமைப்பின் தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீ ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.
மேலும், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அனைத்திந்திய இந்து மகா சபாவின் தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீ-யை அக்டோபர் 28 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அனைத்திந்திய இந்து மகா சபாவின் தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீ 3 முறை சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது விசாரணையில் தெரியவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“தமிழ்நாட்டின் சாபக்கேடு எச்.ராஜா” : அமைச்சர் சேகர்பாபு கடும் தாக்கு!
-
திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா இந்துக் கோயிலா? - பரவும் வதந்திக்கு TN Fact Check விளக்கம்!
-
“எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?” - நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு கனிமொழி எம்.பி. கலாய்!
-
பா.ஜ.க-வின் Fake ID தான் அ.தி.மு.க : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கு!
-
புதிய மேம்பாலம் திறப்பு முதல் முதலீட்டாளர்கள் மாநாடு வரை... முதலமைச்சரால் விழாக் கோலமான மதுரை - விவரம்!