திருச்சந்தூரில் இருந்து கடந்த அக்.10 ஆம் தேதி இரவு அந்தியூர் செல்லும் பேருந்தில் முன்பதிவு செய்து பயணம் செய்த இருவர் ஈரோடு வரை வந்தனர். அவர்கள் பேருந்தில் இருந்து இறங்கும் போது, கையில் எடுத்து வந்த கைப்பையை பேருந்தில் தவறவிட்டு சென்றனர்.
பின்னர் பேருந்து பணிமனைக்கு சென்றது. அப்போது ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பேருந்தின் இருக்கையில் பை இருப்பதை அறிந்து ஆய்வு செய்தபோது அதில் 28 பவுன் தங்க நகைகள் இருப்பது தெரியவந்தது.
உடனே இது குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். பிறகு அதன் உரிமையாளர்களை தொடர்பு கொண்டு, 28 பவுன் தங்க நகையை அவர்களிடம் ஒப்படைத்தனர்.
தவறவிட்ட நகை தங்களுக்கு மீண்டும் கிடைத்ததில் அவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். தங்கம் விலை தினமும் உயர்ந்து வரும் நிலையில், நேர்மையுடன் நடந்து கொண்ட அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.